• May 17 2024

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டு கடத்த முற்பட்ட முக்கிய பொருள்..! சுற்றிவளைப்பில் இருவர் சிக்கினர் samugammedia

Chithra / Sep 27th 2023, 12:28 pm
image

Advertisement


இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக பீடி இலைகளைக் கொண்டுவரப்பட்டு வென்னப்புவ பகுதிக்கு கடத்த முற்பட்ட  இருவர் புத்தளம் தழுவ பகுதியில் தம்பபண்ணி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்பபண்ணி கடற்படையினருக்குக்  கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் தழுவ கஜுவத்த கடற்கரைப் பகுதியில் பீடி இலைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்த வேளை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 40 உரைப் பைகளில் சுமார் 1236 கிலோ கிராம் 500 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் பீடி இலைகளைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனம், லொறி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 85 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென கடற்படையினர் தெரிவித்தனர். 

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையகளென கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்கமாக கொண்டுவரப்பட்டதாக விசாரானைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வாகனம், லொறி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மதுரங்குளி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தம்பபண்ணி கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டு கடத்த முற்பட்ட முக்கிய பொருள். சுற்றிவளைப்பில் இருவர் சிக்கினர் samugammedia இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக பீடி இலைகளைக் கொண்டுவரப்பட்டு வென்னப்புவ பகுதிக்கு கடத்த முற்பட்ட  இருவர் புத்தளம் தழுவ பகுதியில் தம்பபண்ணி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தம்பபண்ணி கடற்படையினருக்குக்  கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் தழுவ கஜுவத்த கடற்கரைப் பகுதியில் பீடி இலைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்த வேளை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது 40 உரைப் பைகளில் சுமார் 1236 கிலோ கிராம் 500 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் பீடி இலைகளைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனம், லொறி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 85 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென கடற்படையினர் தெரிவித்தனர். அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையகளென கடற்படையினர் தெரிவித்தனர்.இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்கமாக கொண்டுவரப்பட்டதாக விசாரானைகளில் தெரியவந்துள்ளது.கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வாகனம், லொறி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மதுரங்குளி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தம்பபண்ணி கடற்படையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement