• May 03 2024

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த முக்கிய பொருட்கள்..! இருவர் கைது..!samugammedia

Sharmi / May 19th 2023, 11:41 am
image

Advertisement

இந்தியாவிலிருந்து சட்டவிரோத பொருட்களைக் கொண்டு வந்த இருவர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடலட்டைகளைக் கொண்டுவருவதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று இரவு சின்னஅறிச்சாறு கடற்கரைப் பகுதியில்  படகொன்றை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது 193 கிலோ கிராம் உலர்ந்த கடலட்டைகள், 33600 ஷாம்போ பக்கற்றுகள், 198 பாம் போத்தல்கள் மற்றும் ஒரு குளிரூட்டி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆனவாசல் பகுதியைச் சேர்ந்த 56 மற்றும் 28 வயதுடைய இருவர் என கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட கடலட்டைகள், ஷாம்போ பக்கற்றுகள், பாம் போத்தல்கள் மற்றும் குளிரூட்டி ஆகியன கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.


இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த முக்கிய பொருட்கள். இருவர் கைது.samugammedia இந்தியாவிலிருந்து சட்டவிரோத பொருட்களைக் கொண்டு வந்த இருவர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடலட்டைகளைக் கொண்டுவருவதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று இரவு சின்னஅறிச்சாறு கடற்கரைப் பகுதியில்  படகொன்றை முற்றுகையிட்டுள்ளனர்.இதன்போது 193 கிலோ கிராம் உலர்ந்த கடலட்டைகள், 33600 ஷாம்போ பக்கற்றுகள், 198 பாம் போத்தல்கள் மற்றும் ஒரு குளிரூட்டி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆனவாசல் பகுதியைச் சேர்ந்த 56 மற்றும் 28 வயதுடைய இருவர் என கடற்படையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட கடலட்டைகள், ஷாம்போ பக்கற்றுகள், பாம் போத்தல்கள் மற்றும் குளிரூட்டி ஆகியன கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement