• May 19 2024

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தை சவாலுக்கு உட்படுத்திய முக்கிய காரணங்கள்! ஆய்வில் வெளியான தகவல்

Chithra / Dec 15th 2022, 3:09 pm
image

Advertisement

இறுக்கமான நாணயக் கொள்கை மற்றும் ஆசியாவின் வேகமான பணவீக்கம் என்பன இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.

இதன்காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் மந்தநிலையில் ஆழமாக வீழ்ச்சியடையக்கூடும் என்று அமெரிக்க செய்தித்தளமான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

ப்ளூம்பெர்க் செய்தித்தளத்தின் பொருளாதார வல்லுனர்களின் ஆய்வின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 10வீதத்தினால் சுருங்கியுள்ளது.

அதிக பணவீக்கம் மற்றும் பலவீனமான நம்பிக்கை நுகர்வு அழுத்தத்தின் கீழ் இருப்பதால் தேவைகள் மந்தமாகவே உள்ளன என்று ப்ளூம்பெர்க் எக்கனோமிக்ஸின் செய்தியாளர் சுக்லா கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை மற்றும் பிற கடன் வழங்குநர்களுடனான மறுசீரமைப்பு பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

சீனாவின் கடன் உத்தரவாதங்கள் இந்த மாதத்தில் நிறைவேறுமானால், ஜனவரியில் இந்த முனைப்புக்;கள் தொடரும். இந்தநிலையில் இலங்கையில் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே விலையுயர்வு 69.8வீதத்தை எட்டியுள்ளது என்றும் ப்ளூம்பேர்க் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தை சவாலுக்கு உட்படுத்திய முக்கிய காரணங்கள் ஆய்வில் வெளியான தகவல் இறுக்கமான நாணயக் கொள்கை மற்றும் ஆசியாவின் வேகமான பணவீக்கம் என்பன இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.இதன்காரணமாக, இலங்கையின் பொருளாதாரம் மந்தநிலையில் ஆழமாக வீழ்ச்சியடையக்கூடும் என்று அமெரிக்க செய்தித்தளமான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.ப்ளூம்பெர்க் செய்தித்தளத்தின் பொருளாதார வல்லுனர்களின் ஆய்வின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 10வீதத்தினால் சுருங்கியுள்ளது.அதிக பணவீக்கம் மற்றும் பலவீனமான நம்பிக்கை நுகர்வு அழுத்தத்தின் கீழ் இருப்பதால் தேவைகள் மந்தமாகவே உள்ளன என்று ப்ளூம்பெர்க் எக்கனோமிக்ஸின் செய்தியாளர் சுக்லா கூறியுள்ளார்.சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை மற்றும் பிற கடன் வழங்குநர்களுடனான மறுசீரமைப்பு பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.சீனாவின் கடன் உத்தரவாதங்கள் இந்த மாதத்தில் நிறைவேறுமானால், ஜனவரியில் இந்த முனைப்புக்;கள் தொடரும். இந்தநிலையில் இலங்கையில் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே விலையுயர்வு 69.8வீதத்தை எட்டியுள்ளது என்றும் ப்ளூம்பேர்க் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement