• May 04 2024

பெரும்பான்மையினத்தவர்கள் ஈழத்தழிழர்களுடன் சேர்ந்து வாழ மறுக்கும் நிலை..! திலீபனின் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமைக்கு பிரித்தானியா கண்டனம்!

Chithra / Sep 21st 2023, 12:32 pm
image

Advertisement

 

தியாக தீபன் திலிபனை நினைவு கூர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஊர்தி பவணி தாக்கப்பட்டமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கும் பிரித்தானியாவின் ஈழத் தழிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.

பெரும்பான்மையினத்தவர்கள் ஈழத்தழிழர்களுடன் சேர்ந்து வாழ மறுக்கும் நிலைமை குறித்த தாக்குதல் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியா ஈழத் தழிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அமைதிப் போராட்டங்களுக்கும் நினைவு நிகழ்வுகளுக்கும் தடை ஏற்படுத்தக் கூடாது என ஜ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ள போதிலும்,

இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதிற்கு இலங்கை அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இது வரையில் முன்னெடுக்காமை கவலையளிக்கின்றது எனவும குறித்த பேரவை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈழத் தழிழர்கள் இறைமையுடன் கூடிய தன்னாட்சியைப் பெற்றுக் கொள்வதற்கும் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய ஜனநாயக ரீதியில் வாழ்வதற்குமான நடவடிக்கைகளை ஐ.நா மனித உரிமை ஆணையகம் ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரித்தானியாவின் ஈழத் தழிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.


பெரும்பான்மையினத்தவர்கள் ஈழத்தழிழர்களுடன் சேர்ந்து வாழ மறுக்கும் நிலை. திலீபனின் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமைக்கு பிரித்தானியா கண்டனம்  தியாக தீபன் திலிபனை நினைவு கூர்ந்து முன்னெடுக்கப்பட்ட ஊர்தி பவணி தாக்கப்பட்டமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கும் பிரித்தானியாவின் ஈழத் தழிழர் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.பெரும்பான்மையினத்தவர்கள் ஈழத்தழிழர்களுடன் சேர்ந்து வாழ மறுக்கும் நிலைமை குறித்த தாக்குதல் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியா ஈழத் தழிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன் அமைதிப் போராட்டங்களுக்கும் நினைவு நிகழ்வுகளுக்கும் தடை ஏற்படுத்தக் கூடாது என ஜ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ள போதிலும்,இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதிற்கு இலங்கை அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இது வரையில் முன்னெடுக்காமை கவலையளிக்கின்றது எனவும குறித்த பேரவை தெரிவித்துள்ளது.இந்த நிலையில், ஈழத் தழிழர்கள் இறைமையுடன் கூடிய தன்னாட்சியைப் பெற்றுக் கொள்வதற்கும் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய ஜனநாயக ரீதியில் வாழ்வதற்குமான நடவடிக்கைகளை ஐ.நா மனித உரிமை ஆணையகம் ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரித்தானியாவின் ஈழத் தழிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement