அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குற்றவியல் விசாரணையை மேற்பார்வையிட்ட நியூயார்க் நீதிபதி மற்றும் வழக்கைக் கொண்டு வந்த வழக்கறிஞர் உட்பட பல அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எட்டு மத்திய அதிகாரிகள் மற்றும் மூன்று மாநில ஊழியர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பியதாக ஸ்பென்சர் கியர் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் அவர்களைத் தாக்கி கொலை செய்வதாக அச்சுறுத்தினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காவலில் வைக்கப்பட்ட கியரின் விசாரணை செப்டம்பர் 24 ஆம் திகதி தொடங்க உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் பல தசாப்தங்களாக சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
ட்ரம்பின் வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் ஆகியோரை மிரட்டியவர் கைது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குற்றவியல் விசாரணையை மேற்பார்வையிட்ட நியூயார்க் நீதிபதி மற்றும் வழக்கைக் கொண்டு வந்த வழக்கறிஞர் உட்பட பல அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.எட்டு மத்திய அதிகாரிகள் மற்றும் மூன்று மாநில ஊழியர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பியதாக ஸ்பென்சர் கியர் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் அவர்களைத் தாக்கி கொலை செய்வதாக அச்சுறுத்தினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.காவலில் வைக்கப்பட்ட கியரின் விசாரணை செப்டம்பர் 24 ஆம் திகதி தொடங்க உள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் பல தசாப்தங்களாக சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.