• May 19 2024

கொழும்பில் திடீர் குழப்பத்திற்கு மத்தியில் ஏற்பட்டது நினைவுச்சுடர்! தமிழ் எம்.பியும் பங்கேற்பு samugammedia

Chithra / May 18th 2023, 11:56 am
image

Advertisement

கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்கும் வகையில் ஒரு குழுவினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுக்கூறுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தும் இந்நிகழ்விற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


குறிப்பிட்ட தரப்பினரின் எதிர்ப்பு மத்தியிலும் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறும் சூடரானது கொழும்பில் ஏற்றப்பட்டுள்ளது. 

அத்துடன் சம்பவம் தொடர்பில் அறிந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமைகளை சுமுகமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்தில் பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதக அறிய முடிகின்றது.

மனித சங்கலி பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டு அதனுள் நினைவேந்தல் சுடர் ஏற்றப்பட்டது


வண.பிதா மா.சக்திவேல், சட்டத்தரணி சுவஸ்திகா அருளிலிங்கம், சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்று நினைவுச் சுடர் ஏற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பு பொரளை பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொழும்பில் திடீர் குழப்பத்திற்கு மத்தியில் ஏற்பட்டது நினைவுச்சுடர் தமிழ் எம்.பியும் பங்கேற்பு samugammedia கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்கும் வகையில் ஒரு குழுவினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுக்கூறுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தும் இந்நிகழ்விற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பிட்ட தரப்பினரின் எதிர்ப்பு மத்தியிலும் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறும் சூடரானது கொழும்பில் ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பில் அறிந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமைகளை சுமுகமாக்கியுள்ளனர்.இந்நிலையில் குறித்த இடத்தில் பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதக அறிய முடிகின்றது.மனித சங்கலி பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டு அதனுள் நினைவேந்தல் சுடர் ஏற்றப்பட்டதுவண.பிதா மா.சக்திவேல், சட்டத்தரணி சுவஸ்திகா அருளிலிங்கம், சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்று நினைவுச் சுடர் ஏற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பு பொரளை பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சம்பவ இடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement