• May 13 2025

ரணிலுக்கு இருந்த தற்றுணிவு அநுரவுக்கு கிடையாது! - விமல் வீரவன்ச விமர்சனம்

Chithra / May 13th 2025, 8:51 am
image

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டார். அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கிடையாது என  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெரும்பான்மை பலம் உள்ளது என்ற ஆணவத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது. 2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் பெரும்பான்மை பலம் இருந்ததையும், அந்த பலம் இரண்டாண்டுக்குள் பலவீனமடைந்ததையும் அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாயின் அதற்கு இந்தியாவின் அனுமதியை பெற வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது. 

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் பகிரங்கப்படுத்தும என்ற நம்பிக்கை கிடையாது. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிபுடன் செயற்பட்டார். அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில் அரசாங்கம் நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிந்துள்ளது. 

மின் கட்டண அதிகரிப்பு ஊடாக இதனை எதிர்வரும் மாதமளவில் விளங்கிக்கொள்ள முடியும் என்றார்.

ரணிலுக்கு இருந்த தற்றுணிவு அநுரவுக்கு கிடையாது - விமல் வீரவன்ச விமர்சனம்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டார். அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கிடையாது என  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.கொழும்பில் நேற்று மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பெரும்பான்மை பலம் உள்ளது என்ற ஆணவத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது. 2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் பெரும்பான்மை பலம் இருந்ததையும், அந்த பலம் இரண்டாண்டுக்குள் பலவீனமடைந்ததையும் அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாயின் அதற்கு இந்தியாவின் அனுமதியை பெற வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் பகிரங்கப்படுத்தும என்ற நம்பிக்கை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிபுடன் செயற்பட்டார். அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கிடையாது.சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில் அரசாங்கம் நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிந்துள்ளது. மின் கட்டண அதிகரிப்பு ஊடாக இதனை எதிர்வரும் மாதமளவில் விளங்கிக்கொள்ள முடியும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement