• Jan 07 2025

வடக்கை உலுக்கும் மர்மக் காய்ச்சல்; உயரும் உயிர்ப்பலி! மந்திகையில் மட்டும் 40 பேருக்குச் சிகிச்சை

Chithra / Dec 12th 2024, 7:25 am
image


மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 47 வயதுடைய ஆனந்தகுமார்  என்ற நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்த பருத்தித்துறையைச் சேர்ந்த நபரின் மாதிரிகளும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கைகள் கிடைத்த பின்னரே இறப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் உறுதியாகத் தெரியவரும்.

இதேவேளை, மர்மக் காய்ச்சல் அறிகுறிகளுடனும், சடுதியான சுகவீனத்துடனும் வடக்கு வைத்தியசாலைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் மட்டும் இதுவரை 40 பேர் மர்மக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரின் உடல்நிலை தொடர்பிலும் தீவிரமான கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சிலரின் உடல்நிலை சடுதியாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

"அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால், எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. அத்துடன், வேறுசில விலங்குகளின் மலத்தொற்றாலும் இவ்வாறான நோய்நிலை ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. 

எனவே, பொதுமக்கள் தமது சுகாதாரம், குடிதண்ணீர் ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். திடீர் காய்ச்சல் மற்றும் சடுதியான சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும்." - என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்  விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக நேற்று வரையில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து ஆளணியினரைப் பெற்றுப் பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆலோசனை வழங்கியுள்ளார்.


வடக்கை உலுக்கும் மர்மக் காய்ச்சல்; உயரும் உயிர்ப்பலி மந்திகையில் மட்டும் 40 பேருக்குச் சிகிச்சை மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறையைச் சேர்ந்த 47 வயதுடைய ஆனந்தகுமார்  என்ற நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.நேற்று உயிரிழந்த பருத்தித்துறையைச் சேர்ந்த நபரின் மாதிரிகளும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கைகள் கிடைத்த பின்னரே இறப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் உறுதியாகத் தெரியவரும்.இதேவேளை, மர்மக் காய்ச்சல் அறிகுறிகளுடனும், சடுதியான சுகவீனத்துடனும் வடக்கு வைத்தியசாலைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் மட்டும் இதுவரை 40 பேர் மர்மக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரின் உடல்நிலை தொடர்பிலும் தீவிரமான கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிலரின் உடல்நிலை சடுதியாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்."அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால், எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. அத்துடன், வேறுசில விலங்குகளின் மலத்தொற்றாலும் இவ்வாறான நோய்நிலை ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. எனவே, பொதுமக்கள் தமது சுகாதாரம், குடிதண்ணீர் ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். திடீர் காய்ச்சல் மற்றும் சடுதியான சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும்." - என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்  விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக நேற்று வரையில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து ஆளணியினரைப் பெற்றுப் பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement