வழி மறிக்கப்பட்ட சுண்ணக்கல் வாகன விவகாரம்..வாகனம் மற்றும் கற்களை விடுவித்த நீதிமன்றம்.
சாவக்கச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் வழிமறிக்கப்பட்ட சுன்னக்கல் ஏற்றிய கனகர வாகனத்தை 5 இலட்சம் ரூபா பிணையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது கடந்த வாரம் சாவகச்சேரி பகுதியில் இரவு வேளை கனகர வாகனத்தில் சுன்னக்கல் ஏற்றிச் செல்லப்படுவதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனத்தை வழிமறித்திருந்தார்.
அச்சமயம் வாகன சாரதிக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் குறித்த பொருளை எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதி தொடர்பான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. .ந்நிலையில் பொலிஸார் குறித்த வாகனத்தை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனம் உரிய அனுமதிகள் பெறாது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த வாகனத்தை தான் மறித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும் குறித்த வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சகல அனுமதிகளும் பெற்றே தாம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் வேண்டுமென்றே தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நடந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்று முன்தினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாகனத்தை எடுத்த செல்வதற்கு மன்று அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் நகத்தல் பத்திரம் மூலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நிறுவனத்தின் சார்பில் கலாநிதி குமார வடிவேல் குருபரன் ஆஜராகி இருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி கலாநிதி குருபரணை தொடர்பு கொண்டு கேட்டபோது 5இலட்சம் ரூபா பிணையில் வாகனமும் கல்லும் விடுவிக்கப்பட்டது. குறித்த வழக்கில் எனது கட்சிக்காரர் கல் அகழ்வு தொழிலை செய்பவர் அல்ல. அனுமதி பெற்றவர்களிடம் பணம் கொடுத்து கற்களை வாகனங்களில் ஏற்றி விற்பனை செய்கிறார்.
2009 ஆண்டு 28 (2) சட்டம் இன்னும் திருத்தப்படவில்லை 1993 தொடக்கம் 2023 ஒழுங்கு விதிகள் யார் அனுமதி பெற வேண்டும் என தெளிவாக கூறுகிறது. அதனை விடுத்து அனுமதிகள் என கூறப்படும் விடயங்கள் எந்தச் சட்டத்தில் இருக்கிறது? யாரிடம் பெற வேண்டுமென கூறினால் அதனையும் பெறத் தயாராக இருக்கிறோம் என மன்றுக்கு தெரிவித்தேன்.அதனையடுத்து இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வராமல் அரச அதிகாரிகளினால் எழுதப்படும் கடிதங்கள் சட்டமாக கொள்ள முடியாது.
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொலிசாரின் அதிகாரங்களை கையில் எடுப்பது தொடர்பில் மன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதற்கு தனியான முறைப்பாடு ஒன்று இருப்பதால் அது பற்றி பின்னர் முடிவெடுப்போம். பொலிசார் குழப்பகரமான சூழ்நிலை இருந்தபடியால் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர் குறித்த வழக்கில் சந்தேக நபர் பெயர் குறிப்பிடப்படாமை தொடர்பில் மன்றுக்கு தெரியப்படுத்தினேன்.
அது மட்டுமல்லாது இரண்டு நீதிமன்றங்களில் சுண்ணக்கல் எடுத்துச் செல்வது தொடர்பில் நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகளை முழுமையாக மன்றில் சமர்ப்பித்தோம்.
சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் வாகனத்தையும் கல்லையும் விடுவித்ததுடன் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு வழக்கு தவணை இடப்பட்டது என்றார்.
வழி மறிக்கப்பட்ட சுண்ணக்கல் வாகன விவகாரம். வாகனம் மற்றும் கற்களை விடுவித்த நீதிமன்றம். வழி மறிக்கப்பட்ட சுண்ணக்கல் வாகன விவகாரம்.வாகனம் மற்றும் கற்களை விடுவித்த நீதிமன்றம்.சாவக்கச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் வழிமறிக்கப்பட்ட சுன்னக்கல் ஏற்றிய கனகர வாகனத்தை 5 இலட்சம் ரூபா பிணையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது கடந்த வாரம் சாவகச்சேரி பகுதியில் இரவு வேளை கனகர வாகனத்தில் சுன்னக்கல் ஏற்றிச் செல்லப்படுவதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனத்தை வழிமறித்திருந்தார்.அச்சமயம் வாகன சாரதிக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் குறித்த பொருளை எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதி தொடர்பான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. .ந்நிலையில் பொலிஸார் குறித்த வாகனத்தை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனம் உரிய அனுமதிகள் பெறாது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த வாகனத்தை தான் மறித்ததாகவும் தெரிவித்திருந்தார்.எனினும் குறித்த வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சகல அனுமதிகளும் பெற்றே தாம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் வேண்டுமென்றே தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நடந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்று முன்தினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாகனத்தை எடுத்த செல்வதற்கு மன்று அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் நகத்தல் பத்திரம் மூலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நிறுவனத்தின் சார்பில் கலாநிதி குமார வடிவேல் குருபரன் ஆஜராகி இருந்தார்.குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி கலாநிதி குருபரணை தொடர்பு கொண்டு கேட்டபோது 5இலட்சம் ரூபா பிணையில் வாகனமும் கல்லும் விடுவிக்கப்பட்டது. குறித்த வழக்கில் எனது கட்சிக்காரர் கல் அகழ்வு தொழிலை செய்பவர் அல்ல. அனுமதி பெற்றவர்களிடம் பணம் கொடுத்து கற்களை வாகனங்களில் ஏற்றி விற்பனை செய்கிறார். 2009 ஆண்டு 28 (2) சட்டம் இன்னும் திருத்தப்படவில்லை 1993 தொடக்கம் 2023 ஒழுங்கு விதிகள் யார் அனுமதி பெற வேண்டும் என தெளிவாக கூறுகிறது. அதனை விடுத்து அனுமதிகள் என கூறப்படும் விடயங்கள் எந்தச் சட்டத்தில் இருக்கிறது யாரிடம் பெற வேண்டுமென கூறினால் அதனையும் பெறத் தயாராக இருக்கிறோம் என மன்றுக்கு தெரிவித்தேன்.அதனையடுத்து இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வராமல் அரச அதிகாரிகளினால் எழுதப்படும் கடிதங்கள் சட்டமாக கொள்ள முடியாது.பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொலிசாரின் அதிகாரங்களை கையில் எடுப்பது தொடர்பில் மன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதற்கு தனியான முறைப்பாடு ஒன்று இருப்பதால் அது பற்றி பின்னர் முடிவெடுப்போம். பொலிசார் குழப்பகரமான சூழ்நிலை இருந்தபடியால் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர் குறித்த வழக்கில் சந்தேக நபர் பெயர் குறிப்பிடப்படாமை தொடர்பில் மன்றுக்கு தெரியப்படுத்தினேன்.அது மட்டுமல்லாது இரண்டு நீதிமன்றங்களில் சுண்ணக்கல் எடுத்துச் செல்வது தொடர்பில் நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகளை முழுமையாக மன்றில் சமர்ப்பித்தோம்.சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று ஐந்து லட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் வாகனத்தையும் கல்லையும் விடுவித்ததுடன் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு வழக்கு தவணை இடப்பட்டது என்றார்.