• Jan 07 2025

இலங்கை சைவமகா சபையின் : ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய ஆன்மீகப் பாதயாத்திரை

Tharmini / Jan 5th 2025, 4:44 pm
image

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு இலங்கை சைவமகாசபையின் வருடாந்த ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய ஆன்மீகப் பாதயாத்திரை, 11 ஆவது வருடமாக மாதகல் சம்புநாத ஈச்சரர் முன்றலில் இன்று (05) ஆரம்பமாகியது.

சம்பில்துறை சம்புநாத ஈச்சரர் ஆலயத்தில் ஆரம்பமாகிய ஆன்மீகப் பாதயாத்திரை சாந்தை ,பனிப்புலம் , சுழிபுரம், மூளாய்,பொன்னாலை ,காரைநகரில் உள்ள பல்வேறு இந்து ஆலயங்களையும்  தரிசித்தவாறு  காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடைந்தது.

இதன் பொழுது அடியவர்களால் சிவனுக்குரிய பஜனைகள் பாராயணத்துடன்  பாதயாத்திரை தரிசித்த ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு , பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு தன்னார்வலர்களால் தாக சாந்தியும் வழங்கப்பட்டது. 

யாத்திரையில் அகில இலங்கை சைவமகாசபையினர் ,தமிழ் சைவ பேரவையினர் , சிவமங்கையர் ,சிவ தொண்டர்கள் , அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




இலங்கை சைவமகா சபையின் : ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய ஆன்மீகப் பாதயாத்திரை திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு இலங்கை சைவமகாசபையின் வருடாந்த ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய ஆன்மீகப் பாதயாத்திரை, 11 ஆவது வருடமாக மாதகல் சம்புநாத ஈச்சரர் முன்றலில் இன்று (05) ஆரம்பமாகியது.சம்பில்துறை சம்புநாத ஈச்சரர் ஆலயத்தில் ஆரம்பமாகிய ஆன்மீகப் பாதயாத்திரை சாந்தை ,பனிப்புலம் , சுழிபுரம், மூளாய்,பொன்னாலை ,காரைநகரில் உள்ள பல்வேறு இந்து ஆலயங்களையும்  தரிசித்தவாறு  காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடைந்தது.இதன் பொழுது அடியவர்களால் சிவனுக்குரிய பஜனைகள் பாராயணத்துடன்  பாதயாத்திரை தரிசித்த ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு , பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு தன்னார்வலர்களால் தாக சாந்தியும் வழங்கப்பட்டது. யாத்திரையில் அகில இலங்கை சைவமகாசபையினர் ,தமிழ் சைவ பேரவையினர் , சிவமங்கையர் ,சிவ தொண்டர்கள் , அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement