• Nov 23 2024

இறந்த வேட்பாளரின் பெயர் வாக்குச் சீட்டில் இருந்து நீக்கப்படாது! தேர்தல் ஆணையாளர்

Chithra / Aug 23rd 2024, 12:09 pm
image

 

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (22) திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததன் காரணமாக இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட மொஹமட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் இடம்பெறுமா என  வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக மாற்று நபரை முன்வைக்க பிரதிநிதிகள் விண்ணப்பித்தால் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட காமினி திஸாநாயக்க குண்டுத் தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து, அவருக்குப் பதிலாக அவரது மனைவி ஸ்ரீமா திஸாநாயக்க முன்னிலைப்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நினைவு கூர்ந்தார்.

இறந்த வேட்பாளரின் பெயர் வாக்குச் சீட்டில் இருந்து நீக்கப்படாது தேர்தல் ஆணையாளர்  2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று (22) திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததன் காரணமாக இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட மொஹமட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் இடம்பெறுமா என  வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.எனவே ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக மாற்று நபரை முன்வைக்க பிரதிநிதிகள் விண்ணப்பித்தால் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.முன்னதாக ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட காமினி திஸாநாயக்க குண்டுத் தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து, அவருக்குப் பதிலாக அவரது மனைவி ஸ்ரீமா திஸாநாயக்க முன்னிலைப்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நினைவு கூர்ந்தார்.

Advertisement

Advertisement

Advertisement