• May 19 2024

இலங்கையில் கொண்டுவரப்படுகின்ற புதிய சட்டங்களால் எந்த பயனும் இல்லை – கடுதாசிதான் விரயம்..! சுமந்திரன் samugammedia

Chithra / Jun 21st 2023, 2:09 pm
image

Advertisement

இலங்கையில் கொண்டுவரப்படுகின்ற புதிய சட்டங்களால் எந்த பயனும் இல்லை என்றும் பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் கடுதாசி விரயமே ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இலங்கையில் சட்டங்கள் தொடர்பாக பாரிய சிக்கல் நிலையே காணப்படுகின்றது.

ஆனால் சட்டமூலங்களினால் இந்த பிரச்சனைகள் ஏற்படவில்லை.

மாறாக சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தான், இந்த பாரிய சிக்கல் நிலை காணப்படுகின்றது.

இது இலங்கை தொடர்ந்தும் காணக்கூடியதொரு பிரச்சனையாகும்.

தற்போதைய அரசாங்கம் புதிய சட்டங்களை கொண்டுவருகின்றது.

ஆனால் இந்த சட்ட மூலங்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அழுத்தங்களினால் கொண்டு வரப்படுகின்றது. 

இது வெறுமனே கடுதாசி விரயத்தை ஏற்படுத்தும் நடைமுறை என நான் நினைக்கின்றேன். 

பொருளாதார நெருக்கடியான நேரத்தில் கூட வெறுமனே கடுதாசிகளை விரயமாக்கும் செயல்.

ஏன்னெனில் சட்டமூலங்கள் அமுல்படுத்தப்பட்டால் தான், அதன் நன்மைகளை மக்கள் பெறமுடியும் 

இதேவேளை சர்வதேச நாணயநிதியத்தை திருப்திப்படுத்துவதற்காக கொண்டு வரப்படுகின்ற சட்டங்கள் இந்த நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்தாது.

அத்துடன் இலங்கை அரசாங்கம் பொறுப்புகூறல் என்ற விடயத்தில் அசமந்த போக்குடன் காணப்படுவதாக ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.


இலங்கையில் கொண்டுவரப்படுகின்ற புதிய சட்டங்களால் எந்த பயனும் இல்லை – கடுதாசிதான் விரயம். சுமந்திரன் samugammedia இலங்கையில் கொண்டுவரப்படுகின்ற புதிய சட்டங்களால் எந்த பயனும் இல்லை என்றும் பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் கடுதாசி விரயமே ஏற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இலங்கையில் சட்டங்கள் தொடர்பாக பாரிய சிக்கல் நிலையே காணப்படுகின்றது.ஆனால் சட்டமூலங்களினால் இந்த பிரச்சனைகள் ஏற்படவில்லை.மாறாக சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தான், இந்த பாரிய சிக்கல் நிலை காணப்படுகின்றது.இது இலங்கை தொடர்ந்தும் காணக்கூடியதொரு பிரச்சனையாகும்.தற்போதைய அரசாங்கம் புதிய சட்டங்களை கொண்டுவருகின்றது.ஆனால் இந்த சட்ட மூலங்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அழுத்தங்களினால் கொண்டு வரப்படுகின்றது. இது வெறுமனே கடுதாசி விரயத்தை ஏற்படுத்தும் நடைமுறை என நான் நினைக்கின்றேன். பொருளாதார நெருக்கடியான நேரத்தில் கூட வெறுமனே கடுதாசிகளை விரயமாக்கும் செயல்.ஏன்னெனில் சட்டமூலங்கள் அமுல்படுத்தப்பட்டால் தான், அதன் நன்மைகளை மக்கள் பெறமுடியும் இதேவேளை சர்வதேச நாணயநிதியத்தை திருப்திப்படுத்துவதற்காக கொண்டு வரப்படுகின்ற சட்டங்கள் இந்த நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்தாது.அத்துடன் இலங்கை அரசாங்கம் பொறுப்புகூறல் என்ற விடயத்தில் அசமந்த போக்குடன் காணப்படுவதாக ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement