• May 02 2024

குருந்தூர் மலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை அகற்றப்படும்...! வெளியான தகவல்.!samugammedia

Sharmi / Apr 3rd 2023, 4:59 pm
image

Advertisement

நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிராகரித்து குருந்தூர் மலையில் கட்டப்படுள்ள பௌத்த விகாரை நிரந்தரமானது அல்ல எனவும் அதனை அகற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஜயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கியுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு கட்டுப்படாமல் குருந்தூரில் புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்பதற்காக வெடுக்குநாறி மலையில் ஆதிசிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்யமுடியாதெனவும் நீதிமன்றத்திற்கு கட்டுபட்டே தாம் செயற்படுவதாக சிறிரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வெடுக்குநாறி தீர்மானம் என்பது நிரந்தரம் என்றும் ஆனால் குருந்தூர் மலையின் புத்த விகாரை நிரந்தரமானது அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை அகற்றப்படும். வெளியான தகவல்.samugammedia நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிராகரித்து குருந்தூர் மலையில் கட்டப்படுள்ள பௌத்த விகாரை நிரந்தரமானது அல்ல எனவும் அதனை அகற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஜயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கியுள்ளார்.நீதிமன்ற தீர்ப்பிற்கு கட்டுப்படாமல் குருந்தூரில் புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்பதற்காக வெடுக்குநாறி மலையில் ஆதிசிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்யமுடியாதெனவும் நீதிமன்றத்திற்கு கட்டுபட்டே தாம் செயற்படுவதாக சிறிரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.வெடுக்குநாறி தீர்மானம் என்பது நிரந்தரம் என்றும் ஆனால் குருந்தூர் மலையின் புத்த விகாரை நிரந்தரமானது அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement