• May 17 2024

வாக்குறுதியை நிறைவேற்றாத வடக்கு ஆளுநர்..! ஒருவர் தற்கொலை! ஆளுநர் செயலகத்திற்கு முன் குவிந்த பணியாளர்கள்.!samugammedia

Sharmi / Apr 3rd 2023, 4:35 pm
image

Advertisement

கடந்த 2022ஆம் ஆண்டு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் தமக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என வட மாகாண வைத்திய சுகாதார உதவிப் பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர், குலந்தைவேலு தயாளன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு மாகாண வைத்திய சுகாதார உதவிப் பணியாளர்கள் இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நியமனங்கள் தொடர்பாக கடந்த காலத்தில் ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றிடம் சென்றிருந்த போதும் தமக்கான நீதி கிடைக்கவில்லை என்றும் இதனால் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தாக குலந்தைவேலு தயாளன் குறிப்பிடுகின்றார்.

இந்நிலையில், புதிதாக வடக்கு மாகாணத்தை பொறுப்பேற்றிருந்த ஜீவன் தியாகராஜா தமது போராட்டத்தை நிறுத்துமாறும் தாம் நியமனங்களை பெற்று தருவதாகவும் உறுதிமொழி வழங்கிய போதும் இதுவரை அதனை நெறிப்படுத்தவில்லை என்றும் குலந்தைவேலு தயாளன் கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு தமது ஊழியர் ஒருவர் மனவிரக்தியில் தற்கொலை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தமக்கு நேர்முகத்தேர்வு இடம்பெற்று நியமனத்திற்காக காத்திருக்கும் பொது தெற்கில் இருந்து சிற்றூழியர்கள் வடக்கில் பணிபுரிவதற்கு அமர்த்தப்படுவதாகவும் வட மாகாண வைத்திய சுகாதார உதவிப் பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குறுதியை நிறைவேற்றாத வடக்கு ஆளுநர். ஒருவர் தற்கொலை ஆளுநர் செயலகத்திற்கு முன் குவிந்த பணியாளர்கள்.samugammedia கடந்த 2022ஆம் ஆண்டு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் தமக்கு வழங்கப்பட்டிருந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என வட மாகாண வைத்திய சுகாதார உதவிப் பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர், குலந்தைவேலு தயாளன் குற்றம் சுமத்தியுள்ளார்.வடக்கு மாகாண வைத்திய சுகாதார உதவிப் பணியாளர்கள் இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தனர்.இந்த நியமனங்கள் தொடர்பாக கடந்த காலத்தில் ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றிடம் சென்றிருந்த போதும் தமக்கான நீதி கிடைக்கவில்லை என்றும் இதனால் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தாக குலந்தைவேலு தயாளன் குறிப்பிடுகின்றார்.இந்நிலையில், புதிதாக வடக்கு மாகாணத்தை பொறுப்பேற்றிருந்த ஜீவன் தியாகராஜா தமது போராட்டத்தை நிறுத்துமாறும் தாம் நியமனங்களை பெற்று தருவதாகவும் உறுதிமொழி வழங்கிய போதும் இதுவரை அதனை நெறிப்படுத்தவில்லை என்றும் குலந்தைவேலு தயாளன் கவலை வெளியிட்டுள்ளார்.இவ்வாறு தமது ஊழியர் ஒருவர் மனவிரக்தியில் தற்கொலை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் தமக்கு நேர்முகத்தேர்வு இடம்பெற்று நியமனத்திற்காக காத்திருக்கும் பொது தெற்கில் இருந்து சிற்றூழியர்கள் வடக்கில் பணிபுரிவதற்கு அமர்த்தப்படுவதாகவும் வட மாகாண வைத்திய சுகாதார உதவிப் பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement