• May 26 2025

நாமலின் அடுத்த வியூகம்; மைத்திரியின் மகனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

Chithra / May 25th 2025, 1:16 pm
image


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ, அழைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வலுவான முறையில் மேற்கொள்வதே இதன் நோக்கம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முன்மொழிவை தஹாம் சிறிசேன இன்னும் ஒப்புதல் அல்லது மறுப்பு குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும் எதிர்காலத்தில் அவர் இது குறித்து ஒரு முடிவை எடுப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், சமீபத்தில் பத்தரமுல்லையில் உள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்னால் நடைபெற்ற போர்வீரர்கள் அஞ்சலி நிகழ்வில் நாமலும் தஹாமும் ஒன்றாக அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


நாமலின் அடுத்த வியூகம்; மைத்திரியின் மகனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ, அழைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வலுவான முறையில் மேற்கொள்வதே இதன் நோக்கம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த முன்மொழிவை தஹாம் சிறிசேன இன்னும் ஒப்புதல் அல்லது மறுப்பு குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.மேலும் எதிர்காலத்தில் அவர் இது குறித்து ஒரு முடிவை எடுப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.இதற்கிடையில், சமீபத்தில் பத்தரமுல்லையில் உள்ள போர்வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்னால் நடைபெற்ற போர்வீரர்கள் அஞ்சலி நிகழ்வில் நாமலும் தஹாமும் ஒன்றாக அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement