09வது ஜனாதிபதி தேர்தல் முடிவுற்ற நிலையில் வாக்கெண்ணும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் பாதுகாப்பு கருதி அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் இன்று பகல் வரையில் நீடிக்கப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாhக பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன் மக்களின் நடமாட்டமும் குறைவாகவே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர்,பொலிஸார் இணைந்து ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பின் பிரதான தேர்தல் அலுவலகமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பாடசாலைக்கு செல்லும் வீதிகளில் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அத்துடன் மட்டக்களப்பு நகரில் விமானப்படையினரும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேநேரம் ரோந்து பணிகளில் ஈடுபட்டுளள் இராணுவத்தினரும் பொலிஸாரும் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை மூடுமாறு ஆறிவுறுத்திவருவதுடன் வீதிகளில் திரிவோரை வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததை காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலை முற்றாக பாதிப்பு. 09வது ஜனாதிபதி தேர்தல் முடிவுற்ற நிலையில் வாக்கெண்ணும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் பாதுகாப்பு கருதி அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு முதல் அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் இன்று பகல் வரையில் நீடிக்கப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாhக பாதிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன் மக்களின் நடமாட்டமும் குறைவாகவே காணப்படுகின்றது.மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர்,பொலிஸார் இணைந்து ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.மட்டக்களப்பின் பிரதான தேர்தல் அலுவலகமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பாடசாலைக்கு செல்லும் வீதிகளில் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.அத்துடன் மட்டக்களப்பு நகரில் விமானப்படையினரும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.இதேநேரம் ரோந்து பணிகளில் ஈடுபட்டுளள் இராணுவத்தினரும் பொலிஸாரும் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை மூடுமாறு ஆறிவுறுத்திவருவதுடன் வீதிகளில் திரிவோரை வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததை காணமுடிந்தது.