• May 08 2024

வடகிழக்கில் இனியும் தொடர்ந்து இடம் பெறக்கூடாது – மக்கள் தெளிவாகவேண்டும் – லவகுசராசா! samugammedia

Tamil nila / May 21st 2023, 5:00 pm
image

Advertisement

தமிழ் மக்களின் நினைவேந்தல்களை தடுப்பதற்காகவும் தமிழ் மக்களின் உரிமைக்குரலை நசுக்குவதற்காகவும் இலங்கை அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் பல செயற்பாடுகளை முன்னெடுப்பதாக வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிவினை வழங்கவேண்டும் என்கின்ற மக்கள் பிரகடனம் தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கண்டுமணி லவகுசராசா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

70 வருடகாலத்திற்கு மேலாக தேசிய இனப்பிரச்சினையிருந்தும் இன்று வரைக்கும் அரசியல் தீர்வு என்பது எட்டாக்கனியாகவேயிருக்கின்றது.

தமிழ் மக்கள், தமது பிள்ளைகளின் நினைவேந்தலை செய்யமுடியாமல் தவிர்க்கின்றார்கள். 

திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை தாயகத்தில் முடக்குவதற்கான அதிகமான செயற்பாடுகளை படைத்தரப்பினர் முன்னெடுத்திருந்தனர். 

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பாதிக்கபட்ட மக்கள், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்டார்கள். அதிகமானவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு கூட வழங்கப்பட்டிருந்தது.

 இலங்கை அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களின் நினைவேந்தல் விடயத்தினை தடுப்பதற்காகவும் உரிமைக்குரலை நசுக்குவதற்காகவும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலைமைகள் வடகிழக்கில் தொடர்ந்து இடம்பெறக்கூடாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நியாயம் நீதி கிடைக்கவேண்டும்.

வடகிழக்கில் இனியும் தொடர்ந்து இடம் பெறக்கூடாது – மக்கள் தெளிவாகவேண்டும் – லவகுசராசா samugammedia தமிழ் மக்களின் நினைவேந்தல்களை தடுப்பதற்காகவும் தமிழ் மக்களின் உரிமைக்குரலை நசுக்குவதற்காகவும் இலங்கை அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் பல செயற்பாடுகளை முன்னெடுப்பதாக வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார்.ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிவினை வழங்கவேண்டும் என்கின்ற மக்கள் பிரகடனம் தொடர்பான தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.இதன்பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கண்டுமணி லவகுசராசா இவ்வாறு தெரிவித்திருந்தார்.70 வருடகாலத்திற்கு மேலாக தேசிய இனப்பிரச்சினையிருந்தும் இன்று வரைக்கும் அரசியல் தீர்வு என்பது எட்டாக்கனியாகவேயிருக்கின்றது.தமிழ் மக்கள், தமது பிள்ளைகளின் நினைவேந்தலை செய்யமுடியாமல் தவிர்க்கின்றார்கள். திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை தாயகத்தில் முடக்குவதற்கான அதிகமான செயற்பாடுகளை படைத்தரப்பினர் முன்னெடுத்திருந்தனர். சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பாதிக்கபட்ட மக்கள், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்டார்கள். அதிகமானவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு கூட வழங்கப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களின் நினைவேந்தல் விடயத்தினை தடுப்பதற்காகவும் உரிமைக்குரலை நசுக்குவதற்காகவும் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.இவ்வாறான நிலைமைகள் வடகிழக்கில் தொடர்ந்து இடம்பெறக்கூடாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நியாயம் நீதி கிடைக்கவேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement