• May 10 2024

இந்த ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! samugammedia

Tamil nila / Apr 26th 2023, 8:47 pm
image

Advertisement

இலங்கைக்கு அண்மித்த பகுதியில் 900 முதல் 1000 கிலோமீற்றர் வரையிலான புதிய நில எல்லை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.ஏ.அஜித்பிரேம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.ஏ.அஜித்பிரேம இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ​​இந்த ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

2020-இல் 16 நிலநடுக்கங்களும் 2021-இல் 18 நிலநடுக்கங்களும் 2022-இல் 5 நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாகவும் இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதகவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை நாட்டின் உள்பகுதியிலும், மீதமுள்ள நிலநடுக்கங்கள் நாட்டின் கரையோரத்திலும் ஏற்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு samugammedia இலங்கைக்கு அண்மித்த பகுதியில் 900 முதல் 1000 கிலோமீற்றர் வரையிலான புதிய நில எல்லை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.ஏ.அஜித்பிரேம தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.ஏ.அஜித்பிரேம இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.எனினும், கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ​​இந்த ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.2020-இல் 16 நிலநடுக்கங்களும் 2021-இல் 18 நிலநடுக்கங்களும் 2022-இல் 5 நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாகவும் இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதகவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை நாட்டின் உள்பகுதியிலும், மீதமுள்ள நிலநடுக்கங்கள் நாட்டின் கரையோரத்திலும் ஏற்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement