• May 02 2024

இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

HIV
Chithra / Jan 7th 2023, 6:53 am
image

Advertisement

காலி மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு மஹமோதர வைத்தியசாலையில் 25 எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த வருடத்தில் 36 பேர் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானதாக காலி மஹமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி தர்ஷனி விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் இன்னும் அதிகமாக இருப்பார்கள் என்றும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.


பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை இலங்கையில் 427 எச்.ஐ.வி நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எயிட்ஸ் ஆபத்தான விகிதத்தில் பரவி வருவதாக கலாநிதி திருமதி விஜேவிக்ரம கவலை குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை விடுக்கப்பட்ட எச்சரிக்கை காலி மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.2021 ஆம் ஆண்டு மஹமோதர வைத்தியசாலையில் 25 எச்ஐவி தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.எனினும் கடந்த வருடத்தில் 36 பேர் எச்ஐவி தொற்றுக்கு உள்ளானதாக காலி மஹமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி தர்ஷனி விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.நோய்த்தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் இன்னும் அதிகமாக இருப்பார்கள் என்றும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்று அவர் கூறியுள்ளார்.இதேவேளை கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை இலங்கையில் 427 எச்.ஐ.வி நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.எயிட்ஸ் ஆபத்தான விகிதத்தில் பரவி வருவதாக கலாநிதி திருமதி விஜேவிக்ரம கவலை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement