• Apr 30 2024

பிறந்த குழந்தையை ஒரு கையில் போனுடன் தூக்கிய செவிலி - பிறந்து சில நிமிடங்களில் நடந்த சோகம்! SamugamMedia

Chithra / Mar 19th 2023, 11:39 am
image

Advertisement

திருவள்ளூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில், 

திருவள்ளூர் மாவட்டம்  பூண்டியை அடுத்த அல்லிக்குழி கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரது மனைவி சந்தியா ஆவர். இவர்களிற்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத நிலையில் சந்தியா தாய்மை அடைந்துள்ளார். 

கடந்த சில தினங்களிற்கு முன்னர் சந்தியாவிற்கு இடுப்பு வலி ஏற்பட்டதால் அருகிலுள்ள கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

அப்போது குழந்தைக்கு பனிக்குடம் உடைந்து விட்டதாகவும் , திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். 


அதையடுத்து சந்தியாவை   திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்பொழுது பெண் தாதி  ஒரு கையில் தொலைபேசியுடன் குழந்தையை எடுத்த வேளை குழந்தை கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. 

பனிக்குடம் உடைந்தமையால் குழந்தையை வென்டிலேட்டரில் வைக்க வேண்டுமென வைத்தியர்கள்   ஒருவாரமாக குழந்தையினை தயார் முதல் குடும்பத்தார் யாருக்கும் காட்டாது வைத்துள்ளனர். 


பின்னர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவிக்க ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். 

செவிலியர்கள் மற்றும் வைத்தியர்களின் அலட்சிய போக்கினால் குழந்தை இறந்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனால் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில் விசாரணை முடிவிலே உண்மை நிலை தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தையை ஒரு கையில் போனுடன் தூக்கிய செவிலி - பிறந்து சில நிமிடங்களில் நடந்த சோகம் SamugamMedia திருவள்ளூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில், திருவள்ளூர் மாவட்டம்  பூண்டியை அடுத்த அல்லிக்குழி கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரது மனைவி சந்தியா ஆவர். இவர்களிற்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத நிலையில் சந்தியா தாய்மை அடைந்துள்ளார். கடந்த சில தினங்களிற்கு முன்னர் சந்தியாவிற்கு இடுப்பு வலி ஏற்பட்டதால் அருகிலுள்ள கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது குழந்தைக்கு பனிக்குடம் உடைந்து விட்டதாகவும் , திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். அதையடுத்து சந்தியாவை   திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்பொழுது பெண் தாதி  ஒரு கையில் தொலைபேசியுடன் குழந்தையை எடுத்த வேளை குழந்தை கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பனிக்குடம் உடைந்தமையால் குழந்தையை வென்டிலேட்டரில் வைக்க வேண்டுமென வைத்தியர்கள்   ஒருவாரமாக குழந்தையினை தயார் முதல் குடும்பத்தார் யாருக்கும் காட்டாது வைத்துள்ளனர். பின்னர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவிக்க ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். செவிலியர்கள் மற்றும் வைத்தியர்களின் அலட்சிய போக்கினால் குழந்தை இறந்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில் விசாரணை முடிவிலே உண்மை நிலை தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement