• Dec 29 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தயாராகும் அநுர தரப்பு..!

Sharmi / Dec 27th 2024, 8:39 am
image

உள்ளூராட்சி சபைத்  தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 05 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அரச தரப்பு  அவதானம் செலுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தேர்தலுக்காக ஏற்கனவே பெறப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்துவிட்டு, புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கான சட்ட திருத்தம் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் மாதம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தாலும், அக்காலப்பகுதியில் சாதாரணதரப் பரீட்சை நடைபெறுவதால் ஏப்ரல் மாதமே பொருத்தமான காலப்பகுதியென கருதப்படுகின்றது.

இதன்அடிப்படையிலேயே தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு, தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தயாராகும் அநுர தரப்பு. உள்ளூராட்சி சபைத்  தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 05 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அரச தரப்பு  அவதானம் செலுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த தேர்தலுக்காக ஏற்கனவே பெறப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்துவிட்டு, புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கான சட்ட திருத்தம் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் மாதம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தாலும், அக்காலப்பகுதியில் சாதாரணதரப் பரீட்சை நடைபெறுவதால் ஏப்ரல் மாதமே பொருத்தமான காலப்பகுதியென கருதப்படுகின்றது.இதன்அடிப்படையிலேயே தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு, தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement