• Oct 02 2024

மக்களும் சர்வதேசமும் என் பக்கம்! - தொழிற்சங்கப் போராட்டம் மூலம் எதனையும் சாதிக்க முடியாது! ரணில் SamugamMedia

Chithra / Mar 26th 2023, 8:16 am
image

Advertisement

"நாட்டு மக்கள் தற்போது என் பக்கமே நிற்கின்றார்கள். சர்வதேச சமூகமும் எனக்கு ஆதரவு வழங்குகின்றது. அதனூடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்கு அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில், தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் - பணிப்புறக்கணிப்புக்கள் மூலம் எதனையும் இங்கு சாதிக்க முடியாது என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்தில்கொள்ள வேண்டும்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"வரி விதிப்பு தவிர்க்க முடியாத ஒன்று. சர்வதேசத்திடமிருந்து வாங்கிய - வாங்குகின்ற கடனை அடைக்க வரி விதிப்பு மிகவும் அவசியம். அரசுக்கு மிரட்டல் விடுக்கும் தொழிற்சங்கத்தினர் இது குறித்து அறிந்திருப்பார்கள்" - என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

"எதிர்க்கட்சிகளுக்குள் பிளவுகள் இருப்பது போல் தொழிற்சங்கங்களுக்குள்ளும் பிளவுகள் உள்ளன. இவற்றில் சுயலாப சிந்தனை கொண்டவர்கள் போராட்டங்களை நடத்துகின்றார்கள். ஆனால, எதனையும் சாதிக்க முடியாது என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்தில்கொள்ள வேண்டும்" - என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

மக்களும் சர்வதேசமும் என் பக்கம் - தொழிற்சங்கப் போராட்டம் மூலம் எதனையும் சாதிக்க முடியாது ரணில் SamugamMedia "நாட்டு மக்கள் தற்போது என் பக்கமே நிற்கின்றார்கள். சர்வதேச சமூகமும் எனக்கு ஆதரவு வழங்குகின்றது. அதனூடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்கு அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில், தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் - பணிப்புறக்கணிப்புக்கள் மூலம் எதனையும் இங்கு சாதிக்க முடியாது என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்தில்கொள்ள வேண்டும்." - இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்."வரி விதிப்பு தவிர்க்க முடியாத ஒன்று. சர்வதேசத்திடமிருந்து வாங்கிய - வாங்குகின்ற கடனை அடைக்க வரி விதிப்பு மிகவும் அவசியம். அரசுக்கு மிரட்டல் விடுக்கும் தொழிற்சங்கத்தினர் இது குறித்து அறிந்திருப்பார்கள்" - என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்."எதிர்க்கட்சிகளுக்குள் பிளவுகள் இருப்பது போல் தொழிற்சங்கங்களுக்குள்ளும் பிளவுகள் உள்ளன. இவற்றில் சுயலாப சிந்தனை கொண்டவர்கள் போராட்டங்களை நடத்துகின்றார்கள். ஆனால, எதனையும் சாதிக்க முடியாது என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்தில்கொள்ள வேண்டும்" - என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement