• Jan 20 2025

பேய் போல சுற்றித்திரியும் மர்ம உருவத்தால் அச்சத்தில் பதுளை மக்கள்!

Chithra / Jan 19th 2025, 2:14 pm
image


பதுளை மாவட்டம் மீகஹகிவுல பகுதியில் பெண் ஒருவர் பேய் உருவத்தில் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.  

இந்தப் பெண் மாலையிலும், இரவிலும் வீதி ஓரங்களில் மக்களையும், முச்சக்கர வண்டிகளையும் பின்தொடர்வதாகக் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக மீகஹகிவுல, பஹல்கெதர மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகள், கிராம மக்கள் பலர், இந்த மர்ம உருவத்தை அப்பகுதியில் வீதி ஓரங்களில் பார்த்துள்ளதாகவும், 

இதுவரை அந்த மர்ம உருவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

யாரோ ஒருவர் ஏதோ ஒரு திருட்டு அல்லது குற்றச் செயலை செய்யத் திட்டமிடுவதாக சந்தேகம் எழுவதாகவும், 

இதன் காரணமாக அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் வாழ்வதாகவும் தெரியவருகின்றது.


பேய் போல சுற்றித்திரியும் மர்ம உருவத்தால் அச்சத்தில் பதுளை மக்கள் பதுளை மாவட்டம் மீகஹகிவுல பகுதியில் பெண் ஒருவர் பேய் உருவத்தில் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.  இந்தப் பெண் மாலையிலும், இரவிலும் வீதி ஓரங்களில் மக்களையும், முச்சக்கர வண்டிகளையும் பின்தொடர்வதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மீகஹகிவுல, பஹல்கெதர மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.முச்சக்கர வண்டி சாரதிகள், கிராம மக்கள் பலர், இந்த மர்ம உருவத்தை அப்பகுதியில் வீதி ஓரங்களில் பார்த்துள்ளதாகவும், இதுவரை அந்த மர்ம உருவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. யாரோ ஒருவர் ஏதோ ஒரு திருட்டு அல்லது குற்றச் செயலை செய்யத் திட்டமிடுவதாக சந்தேகம் எழுவதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் வாழ்வதாகவும் தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement