• Nov 28 2024

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனை...! எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு...! சபையில் சுசில் பிரேமஜயந்த உறுதி...!

Sharmi / Jun 20th 2024, 6:36 pm
image

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு  எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இன்றைய(20)  பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனை தொடர்பாக  சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களோடு கடந்த மூன்று மாதங்களில் 2 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றேன்.

கல்விசாரா ஊழியர்களின் பிரச்னை தொடர்பாக  சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களோடு கடந்த மூன்று மாதங்களில் 2 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றேன். பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவும் பேசியிருக்கின்றது. ஆசிரியர் குழாமும் பேசியிருக்கின்றது. 

இதற்கான பதில் என்னவெனில் இங்கு இரண்டு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. 2018ம் ஆண்டில் அந்த சந்தர்ப்பத்தில் கல்விசாரா ஊழியர்களுக்கு 92 சதவீத அதிகரிப்பும் கல்விசார் ஊழியர்களுக்கும் 107 சதவீத அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இவற்றுக்கிடையில் உள்ள 15 சதவீத அதிகரிப்பை பெற்றுக்கொள்வதே கல்விசாரா ஊழியர்களின்  கோரிக்கை.

இது தொடர்பில் இரு தடவை திறைசேரியோடும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோடும் கலந்துரையாடியிருக்கின்றோம்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான நிதியை ஒதுக்கி, இந்த ஏற்றத்தாழ்வில் சிக்கல்கள் வராதபடி தீர்வு வழங்க வேண்டும் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம்.  

இந்த நிலையில் கல்விசாரா ஊழியர்களுக்கு மேலும் 22 சதவீத அதிகரிப்பு நடந்தது. அதன் பிறகு கல்விசாரா ஊழியர்கள் மேலும் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள். சீராக்கப்பட்ட ஒரு கொடுப்பனவினை வழங்க வேண்டும் என்பதுதான்  அவர்களின் இரண்டாவது கோரிக்கை. இந்த 2 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். 

கல்விசாரா ஊழியர்கள் கல்வி சார் ஊழியர்களுக்கு  அதிகரித்தது போலவே சீராக்கப்பட்ட கொடுப்பனவை கோருகின்றார்கள். அதற்கு குழுவொன்றை அமைத்து நாங்கள் பேச்சுவார்த்ததை நடத்தி வருகின்றோம். 

கல்விசாரா ஊழியர்கள் அது சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்குமாறு கேட்டிருக்கின்றோம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நிதி இருந்தால் இந்த பிரச்சனையை ஓரளவு தீர்க்க முடியும். தனித்து இதை செய்யமுடியாது. எதை செய்யவேண்டுமானாலும் திறைசேரியின் அங்கீகாரம் அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனை. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு. சபையில் சுசில் பிரேமஜயந்த உறுதி. பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு  எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.இன்றைய(20)  பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனை தொடர்பாக  சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களோடு கடந்த மூன்று மாதங்களில் 2 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றேன்.கல்விசாரா ஊழியர்களின் பிரச்னை தொடர்பாக  சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களோடு கடந்த மூன்று மாதங்களில் 2 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றேன். பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவும் பேசியிருக்கின்றது. ஆசிரியர் குழாமும் பேசியிருக்கின்றது. இதற்கான பதில் என்னவெனில் இங்கு இரண்டு விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. 2018ம் ஆண்டில் அந்த சந்தர்ப்பத்தில் கல்விசாரா ஊழியர்களுக்கு 92 சதவீத அதிகரிப்பும் கல்விசார் ஊழியர்களுக்கும் 107 சதவீத அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இவற்றுக்கிடையில் உள்ள 15 சதவீத அதிகரிப்பை பெற்றுக்கொள்வதே கல்விசாரா ஊழியர்களின்  கோரிக்கை.இது தொடர்பில் இரு தடவை திறைசேரியோடும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோடும் கலந்துரையாடியிருக்கின்றோம்.எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான நிதியை ஒதுக்கி, இந்த ஏற்றத்தாழ்வில் சிக்கல்கள் வராதபடி தீர்வு வழங்க வேண்டும் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம்.  இந்த நிலையில் கல்விசாரா ஊழியர்களுக்கு மேலும் 22 சதவீத அதிகரிப்பு நடந்தது. அதன் பிறகு கல்விசாரா ஊழியர்கள் மேலும் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள். சீராக்கப்பட்ட ஒரு கொடுப்பனவினை வழங்க வேண்டும் என்பதுதான்  அவர்களின் இரண்டாவது கோரிக்கை. இந்த 2 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். கல்விசாரா ஊழியர்கள் கல்வி சார் ஊழியர்களுக்கு  அதிகரித்தது போலவே சீராக்கப்பட்ட கொடுப்பனவை கோருகின்றார்கள். அதற்கு குழுவொன்றை அமைத்து நாங்கள் பேச்சுவார்த்ததை நடத்தி வருகின்றோம். கல்விசாரா ஊழியர்கள் அது சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்குமாறு கேட்டிருக்கின்றோம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நிதி இருந்தால் இந்த பிரச்சனையை ஓரளவு தீர்க்க முடியும். தனித்து இதை செய்யமுடியாது. எதை செய்யவேண்டுமானாலும் திறைசேரியின் அங்கீகாரம் அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement