• May 26 2026

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் கம்பஹாவில் ஆரம்பம்! - சாமர சம்பத் பகிரங்கம்

Chithra / May 25th 2026, 10:55 am
image

ஜனாதிபதி தலைகீழாக இருந்தாலும் டொலரின் பெறமதி அதிகரிப்பதை தடுத்து நிறுத்த முடியாது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை கம்பஹாவில் இருந்து ஆரம்பிப்போம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாமரசம்பத் தசநாயக்க தெரிவித்தார்.


பொய்யையும் திருட்டையும் ஒன்றாக தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் கூட்டு  எதிர்க்க்கட்சி நேற்று (24) கம்பஹா ஜாஎல பிரேதேசத்தில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு உரையா்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து  டொலரின் பெறுமதி பாரியளவில் அதிகரிக்கும் என நான் கடந்த பெப்ரவரி மாதத்தில் தெரிவித்திருந்தேன். அதேபோன்று எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என கடந்த  மார்ச் மாதம் தெரிவித்திருந்தேன். அதேபோன்று விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும். ஜனாதிபதி தலைகீழாக இருந்தாலும் அதனை தடுக்க முடியாது. ஏனெனில் இவர்களுக்கு நாட்டை நிர்வகிக்க தெரியாது.


ஊழல் மோசடியை இல்லாமலாக்குவதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்தார்கள். தற்போது வாகனங்களுக்கான வரி அதிகரிப்பின் மூலம் பாரிய மோசடி இடம்பெற்றிருக்கிறது. வரி அதிகரிப்பதற்கு முன்னர்  ஜனாதிபதி தனக்கு தேவைையானவர்களுக்கு அது தொடர்பான அனைத்து தவகல்களையும் வழங்கவிட்டு, எதுவும் தெரியாதுபோன்று செயற்படுகிறார். அதனாலே வாகனங்களுக்கான வரி அதிகரிப்பு  வர்த்தமானி வெளிவருவதற்கு ஒரு  நாளைக்கு முன்னர் 4ஆயிரம் வாகனங்களுக்கு வங்கி கடன் பற்றுப்பத்திரம் திறக்கப்பட்டிருக்கிறது. 

 

இந்த வாகனங்கள் மூலம் ஜனாதிபதி உள்ளிட்ட சிலருக்கு கொமிசன் இருக்கிறது. இதனால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பணம்  பெலவத்தை கணக்கிற்கு செல்வதை இடமளிக்க முடியாது. அதனால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும். அதனை தவிர்க்க முடியாது. 


அன்று நாடு வீழ்ச்சியடைந்தபோது, நாட்டை கட்டியெழுப்புவதற்காக கட்சி பேதமின்றி நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கி, வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தோம். அன்று நாங்கள் செய்த அர்ப்பணிப்பு காரணமாக எமது தலைவர்கள் பலர் மக்களால் நிராகரிக்கப்பட்டனர். ஆனால் இன்னும் 6 மாதங்கள் செல்வதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை மீணடும் கொண்டுவரும் நிலையே இருக்கிறது எனத் தெரிவித்தார்.  

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் கம்பஹாவில் ஆரம்பம் - சாமர சம்பத் பகிரங்கம் ஜனாதிபதி தலைகீழாக இருந்தாலும் டொலரின் பெறமதி அதிகரிப்பதை தடுத்து நிறுத்த முடியாது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை கம்பஹாவில் இருந்து ஆரம்பிப்போம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாமரசம்பத் தசநாயக்க தெரிவித்தார்.பொய்யையும் திருட்டையும் ஒன்றாக தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் கூட்டு  எதிர்க்க்கட்சி நேற்று (24) கம்பஹா ஜாஎல பிரேதேசத்தில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு உரையா்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து  டொலரின் பெறுமதி பாரியளவில் அதிகரிக்கும் என நான் கடந்த பெப்ரவரி மாதத்தில் தெரிவித்திருந்தேன். அதேபோன்று எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என கடந்த  மார்ச் மாதம் தெரிவித்திருந்தேன். அதேபோன்று விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும். ஜனாதிபதி தலைகீழாக இருந்தாலும் அதனை தடுக்க முடியாது. ஏனெனில் இவர்களுக்கு நாட்டை நிர்வகிக்க தெரியாது.ஊழல் மோசடியை இல்லாமலாக்குவதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்தார்கள். தற்போது வாகனங்களுக்கான வரி அதிகரிப்பின் மூலம் பாரிய மோசடி இடம்பெற்றிருக்கிறது. வரி அதிகரிப்பதற்கு முன்னர்  ஜனாதிபதி தனக்கு தேவைையானவர்களுக்கு அது தொடர்பான அனைத்து தவகல்களையும் வழங்கவிட்டு, எதுவும் தெரியாதுபோன்று செயற்படுகிறார். அதனாலே வாகனங்களுக்கான வரி அதிகரிப்பு  வர்த்தமானி வெளிவருவதற்கு ஒரு  நாளைக்கு முன்னர் 4ஆயிரம் வாகனங்களுக்கு வங்கி கடன் பற்றுப்பத்திரம் திறக்கப்பட்டிருக்கிறது.  இந்த வாகனங்கள் மூலம் ஜனாதிபதி உள்ளிட்ட சிலருக்கு கொமிசன் இருக்கிறது. இதனால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பணம்  பெலவத்தை கணக்கிற்கு செல்வதை இடமளிக்க முடியாது. அதனால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும். அதனை தவிர்க்க முடியாது. அன்று நாடு வீழ்ச்சியடைந்தபோது, நாட்டை கட்டியெழுப்புவதற்காக கட்சி பேதமின்றி நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கி, வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தோம். அன்று நாங்கள் செய்த அர்ப்பணிப்பு காரணமாக எமது தலைவர்கள் பலர் மக்களால் நிராகரிக்கப்பட்டனர். ஆனால் இன்னும் 6 மாதங்கள் செல்வதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை மீணடும் கொண்டுவரும் நிலையே இருக்கிறது எனத் தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement