• Sep 30 2024

மீனா செய்த காரியத்தால் முத்துவை காரி துப்பும் பொது மக்கள்! ஸ்ருதிக்கு வந்த அவசரம்

Aathira / May 3rd 2024, 9:20 am
image

Advertisement

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில், மினிஸ்டரை பாரில் இறக்கி விட்டு அவர்கள் வரும் வரை வெளியில் காத்து இருக்கிறார் முத்து. அந்த நேரத்தில் முத்துவுக்கு நீண்ட சவாரி ஒன்று வர, உள்ளே சென்று அவர்களுக்கு சொல்லிவிட்டு செல்லலாம் என உள்ளே  கிளம்புகிறார்.

ஆனால் அங்கே போய் பார்த்தபோது மினிஸ்டரையும் மினிஸ்டர்  நண்பரையும் காணவில்லை. இதனால் அவர் வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கிறார். அதன் பின்பு மினிஸ்டர் வந்ததும் விஷயத்தை சொல்ல முயல, அந்த நேரத்தில் முத்துவின் நண்பர் சாராய பாட்டில் ஒன்றை திறக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க அதை முத்து வாங்கி திறக்கிறார். 

அதேவேளை, அந்த பாரில் சிட்டியும் சிட்டியின் நண்பர்களும் இருக்கிறார்கள். முத்து பாரின் உள்ளே வரும்போதே அவரை நோட்டமிட தொடங்கி விட்டார்கள். அத்தோடு மீனா தன்னை காலையில் அசிங்கப்படுத்தியதற்கு பதிலாக அவ புருசனை ஊரே பேசும் அளவிற்கு வைப்பேன் என முத்துவை வீடியோ எடுக்கிறார் சிட்டி.


இன்னொரு பக்கம் ஸ்ருதி, ரவியின் ரெஸ்டாரண்டுக்கு சென்று, எனக்கு சீக்கிரமாகவே குழந்தை பெற்றுக் கொள்ளணும் வா போவோம் என்று சொல்ல, அங்கு உள்ளவர்கள் எல்லாரும் பார்க்கின்றார்கள். மேலும் எனக்கு இப்பவே குழந்தை பெற்றுக் கொள்ளணும் நீ ஹாஃப் டே லீவு போட்டுட்டு வா என்று ரவியுடன் பேசிக் கொண்டிருக்க, நீ உண்மையாவா சொல்ற எங்களுக்கு முதல் முத்து, மனோஜ் இருக்காங்க. அவங்க தானே குழந்தை பெற்றுக்கொள்ளனும் என்று சொல்ல, அப்படி எல்லாம் கிடையாது சீக்கிரமாவே குழந்தை வேணும் என்று சொல்லிச் செல்கிறார் ஸ்ருதி.

பாரில் முத்து இருக்கும்போதும் சாப்பிடும்போதும் பாட்டிலை தூக்கி பார்க்கும் போதும், மினிஸ்டரிடம் செல்லும்போது அங்குள்ள ஒரு சில குடிகாரர்கள் முத்துமேல் மோதுகின்றார்கள். அவை அனைத்தையுமே வீடியோவாக எடுத்து முத்து குடிப்பது போல எடிட் பண்ணி இணையதளத்தில் வெளி விடுகின்றார்கள். இதை தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகி எல்லோரும் பார்க்கின்றார்கள்.

மறுபக்கம் மீனா அம்மா வீட்டில் இருக்க, அங்கு சத்யா வருகிறார். நீ இன்னும் சிட்டி கூடத்தான் சுத்திக் கொண்டிருக்கிறாயா? நீ உண்மை பேசுறியா பொய் சொல்லுறிய என்று தெரியவில்லை என்று மீனா சொல்லிக் கொண்டிருக்க, சத்யா விலை உயர்ந்த ஃபோனை வைத்திருப்பதை பார்க்கின்றார். மேலும் அதில் முத்துவின் வீடியோவை காட்ட மீனா அதிர்ச்சி அடைகின்றார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்

மீனா செய்த காரியத்தால் முத்துவை காரி துப்பும் பொது மக்கள் ஸ்ருதிக்கு வந்த அவசரம் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில், மினிஸ்டரை பாரில் இறக்கி விட்டு அவர்கள் வரும் வரை வெளியில் காத்து இருக்கிறார் முத்து. அந்த நேரத்தில் முத்துவுக்கு நீண்ட சவாரி ஒன்று வர, உள்ளே சென்று அவர்களுக்கு சொல்லிவிட்டு செல்லலாம் என உள்ளே  கிளம்புகிறார்.ஆனால் அங்கே போய் பார்த்தபோது மினிஸ்டரையும் மினிஸ்டர்  நண்பரையும் காணவில்லை. இதனால் அவர் வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கிறார். அதன் பின்பு மினிஸ்டர் வந்ததும் விஷயத்தை சொல்ல முயல, அந்த நேரத்தில் முத்துவின் நண்பர் சாராய பாட்டில் ஒன்றை திறக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க அதை முத்து வாங்கி திறக்கிறார். அதேவேளை, அந்த பாரில் சிட்டியும் சிட்டியின் நண்பர்களும் இருக்கிறார்கள். முத்து பாரின் உள்ளே வரும்போதே அவரை நோட்டமிட தொடங்கி விட்டார்கள். அத்தோடு மீனா தன்னை காலையில் அசிங்கப்படுத்தியதற்கு பதிலாக அவ புருசனை ஊரே பேசும் அளவிற்கு வைப்பேன் என முத்துவை வீடியோ எடுக்கிறார் சிட்டி.இன்னொரு பக்கம் ஸ்ருதி, ரவியின் ரெஸ்டாரண்டுக்கு சென்று, எனக்கு சீக்கிரமாகவே குழந்தை பெற்றுக் கொள்ளணும் வா போவோம் என்று சொல்ல, அங்கு உள்ளவர்கள் எல்லாரும் பார்க்கின்றார்கள். மேலும் எனக்கு இப்பவே குழந்தை பெற்றுக் கொள்ளணும் நீ ஹாஃப் டே லீவு போட்டுட்டு வா என்று ரவியுடன் பேசிக் கொண்டிருக்க, நீ உண்மையாவா சொல்ற எங்களுக்கு முதல் முத்து, மனோஜ் இருக்காங்க. அவங்க தானே குழந்தை பெற்றுக்கொள்ளனும் என்று சொல்ல, அப்படி எல்லாம் கிடையாது சீக்கிரமாவே குழந்தை வேணும் என்று சொல்லிச் செல்கிறார் ஸ்ருதி.பாரில் முத்து இருக்கும்போதும் சாப்பிடும்போதும் பாட்டிலை தூக்கி பார்க்கும் போதும், மினிஸ்டரிடம் செல்லும்போது அங்குள்ள ஒரு சில குடிகாரர்கள் முத்துமேல் மோதுகின்றார்கள். அவை அனைத்தையுமே வீடியோவாக எடுத்து முத்து குடிப்பது போல எடிட் பண்ணி இணையதளத்தில் வெளி விடுகின்றார்கள். இதை தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகி எல்லோரும் பார்க்கின்றார்கள்.மறுபக்கம் மீனா அம்மா வீட்டில் இருக்க, அங்கு சத்யா வருகிறார். நீ இன்னும் சிட்டி கூடத்தான் சுத்திக் கொண்டிருக்கிறாயா நீ உண்மை பேசுறியா பொய் சொல்லுறிய என்று தெரியவில்லை என்று மீனா சொல்லிக் கொண்டிருக்க, சத்யா விலை உயர்ந்த ஃபோனை வைத்திருப்பதை பார்க்கின்றார். மேலும் அதில் முத்துவின் வீடியோவை காட்ட மீனா அதிர்ச்சி அடைகின்றார். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்

Advertisement

Advertisement

Advertisement