• Nov 28 2024

மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்சக்களுக்கு தார்மீக உரிமை இல்லை- சம்பிக்க காட்டம்..!

Sharmi / Aug 10th 2024, 8:36 am
image

நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க' மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்சக்களுக்கு தார்மீக உரிமை கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சக்கள் பொறுப் புக்கூறவேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 

ஆகவே மீண்டும் மக்க ளாணை கோருவதற்கு ராஜபக்சக்களுக்கு தார்மீக உரிமை கிடையாது.

இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜயசேகர, செஹான் சேமசிங்க, பிரமித்த பண்டார தென்னக் கோன் ஆகியோர் உட்பட மிகச் சிறந்த இளம் அரசியல் தலைவர்கள் ராஜபக்சக்களிடம் இருந்து விலகியுள்ளமையை ஆத்மார்த்தமாக வரவேற்கின்றேன்.

2022ஆம் ஆண்டு எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையின் போது ராஜபக்சக்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் என்னைச் சந்தித்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்குத் தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார். 

அப்போது 'வலையில் சிக்கிய புலியை பரிதாபப்பட்டுக் காப்பாற்றிய குரங்கை, அடித்து கொன்று இரையாக்கிய புலியின் கதையை குறிப்பிட்டேன். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இன்று இதே கதிதான் நேர்ந்துள்ளது. 

தன்னைப் பாதுகாத்த ஜனாதிபதி மீதே ராஜபக்சக்கள் பாய்ந்துள்ளார்கள்.

தமது தேவை நிறைவடைந்தவுடன் எவராக இருந்தாலும் ராஜபக்சக்கள் அவர்களைத் தூக்கி எறிவார்கள். 

2014ஆம் ஆண்டு நான் அதை ஒரு படிப்பினையாகக் கற்றுக்கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பல பில்லியன் ரூபாவைச் செலவு செய்து இந்த படிப்பினையை 2024 ஆம் ஆண்டு கற்றுக் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார். 

மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்சக்களுக்கு தார்மீக உரிமை இல்லை- சம்பிக்க காட்டம். நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க' மீண்டும் மக்களாணை கோருவதற்கு ராஜபக்சக்களுக்கு தார்மீக உரிமை கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சக்கள் பொறுப் புக்கூறவேண்டும் என உயர்நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆகவே மீண்டும் மக்க ளாணை கோருவதற்கு ராஜபக்சக்களுக்கு தார்மீக உரிமை கிடையாது.இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜயசேகர, செஹான் சேமசிங்க, பிரமித்த பண்டார தென்னக் கோன் ஆகியோர் உட்பட மிகச் சிறந்த இளம் அரசியல் தலைவர்கள் ராஜபக்சக்களிடம் இருந்து விலகியுள்ளமையை ஆத்மார்த்தமாக வரவேற்கின்றேன்.2022ஆம் ஆண்டு எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையின் போது ராஜபக்சக்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் என்னைச் சந்தித்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்குத் தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார். அப்போது 'வலையில் சிக்கிய புலியை பரிதாபப்பட்டுக் காப்பாற்றிய குரங்கை, அடித்து கொன்று இரையாக்கிய புலியின் கதையை குறிப்பிட்டேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இன்று இதே கதிதான் நேர்ந்துள்ளது. தன்னைப் பாதுகாத்த ஜனாதிபதி மீதே ராஜபக்சக்கள் பாய்ந்துள்ளார்கள்.தமது தேவை நிறைவடைந்தவுடன் எவராக இருந்தாலும் ராஜபக்சக்கள் அவர்களைத் தூக்கி எறிவார்கள். 2014ஆம் ஆண்டு நான் அதை ஒரு படிப்பினையாகக் கற்றுக்கொண்டேன். நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பல பில்லியன் ரூபாவைச் செலவு செய்து இந்த படிப்பினையை 2024 ஆம் ஆண்டு கற்றுக் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement