• Nov 25 2024

ரணிலின் தொங்கு பாலத்திலிருந்து நாட்டை அழித்த ராஜபக்ஷர்களே கரை சேர்ந்துள்ளனர்! - சஜித் பகிரங்கம்

Chithra / Mar 10th 2024, 10:14 am
image

 

தொங்கு பாலத்திலிருந்து நாட்டு மக்களை கரைசேர்த்ததாக ஜனாதிபதி கூறினாலும், உண்மையில் நாட்டை அழித்த ராஜபக்ஷர்களை மாத்திரமே ஜனாதிபதி தொங்கு பாலத்திலிருந்து கரைசேர்த்துள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் 'மக்கள் அரண்' வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம்இ யாப்பஹுவ தேர்தல் தொகுதியின் தலதாகம சந்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முழு நாடும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் மின்சாரக் கட்டணம் 500 - 600 சதவீதம் வரை அதிகரித்தது.

 நீர்க் கட்டணம் அதிகரித்து, வாழ்க்கைச் சுமை அதிகரித்து, வேலையிழப்பு அதிகரித்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இளைஞர்கள் வீதிக்கு இறங்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் காலத்தைப் போல நாட்டில் ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டுள்ளது. 

நாட்டு மக்களுக்கு சுமைகள் அதிகரித்து வரும் நிலைமையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பார்வையில் புதிய இயல்பு நிலையாக உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும், தனது ஐக்கிய சட்டத்தரணிகள் குழு, மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை மூலம் உயர் நீதிமன்றத்துக்கு சென்று எதிர்க்கட்சியில் இருந்தவாறே ராஜபக்ஷர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற தீர்ப்பை பெற்றுக்கொண்டது. 

திருடர்களை பிடிப்போம் என கோப்புகளை காட்டி அரசியல் நாடகங்களை நடத்தாது ஐக்கிய மக்கள் சக்தி செயல் ரீதியாக நடவடிக்கை எடுத்தது.

நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகும்போது ஜனாதிபதி தலைமையிலான நாட்டை அழித்த மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஷர்களுடன் இணைந்து தமது விருப்பப்படி நடந்து வருகின்றனர். என்றார். 

ரணிலின் தொங்கு பாலத்திலிருந்து நாட்டை அழித்த ராஜபக்ஷர்களே கரை சேர்ந்துள்ளனர் - சஜித் பகிரங்கம்  தொங்கு பாலத்திலிருந்து நாட்டு மக்களை கரைசேர்த்ததாக ஜனாதிபதி கூறினாலும், உண்மையில் நாட்டை அழித்த ராஜபக்ஷர்களை மாத்திரமே ஜனாதிபதி தொங்கு பாலத்திலிருந்து கரைசேர்த்துள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் 'மக்கள் அரண்' வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம்இ யாப்பஹுவ தேர்தல் தொகுதியின் தலதாகம சந்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,முழு நாடும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் மின்சாரக் கட்டணம் 500 - 600 சதவீதம் வரை அதிகரித்தது. நீர்க் கட்டணம் அதிகரித்து, வாழ்க்கைச் சுமை அதிகரித்து, வேலையிழப்பு அதிகரித்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இளைஞர்கள் வீதிக்கு இறங்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.கொவிட் காலத்தைப் போல நாட்டில் ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு சுமைகள் அதிகரித்து வரும் நிலைமையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பார்வையில் புதிய இயல்பு நிலையாக உள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும், தனது ஐக்கிய சட்டத்தரணிகள் குழு, மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை மூலம் உயர் நீதிமன்றத்துக்கு சென்று எதிர்க்கட்சியில் இருந்தவாறே ராஜபக்ஷர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற தீர்ப்பை பெற்றுக்கொண்டது. திருடர்களை பிடிப்போம் என கோப்புகளை காட்டி அரசியல் நாடகங்களை நடத்தாது ஐக்கிய மக்கள் சக்தி செயல் ரீதியாக நடவடிக்கை எடுத்தது.நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகும்போது ஜனாதிபதி தலைமையிலான நாட்டை அழித்த மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஷர்களுடன் இணைந்து தமது விருப்பப்படி நடந்து வருகின்றனர். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement