• May 20 2024

இராணுவத்தினரின் காணி விடுவிப்பு; பலாலி வடக்கு மக்கள் ஏமாற்றம்!

Chithra / Feb 5th 2023, 10:51 am
image

Advertisement

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் (03) யாழ்ப்பாணம் பலாலி வடக்கு இல 254 பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி நிலங்கள்  விடுவிக்கப்பட்டிருந்தது.


இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒரு துண்டு நிலம்கூட பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 


சுதந்திரத்தினத்துக்கு முன்னர் தமது காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி காணி விடுவிப்பு நடைபெறும் இடத்துக்கு வருகைதந்து பார்த்த போது தமக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அரச நிலமாக காணப்பட்ட சிறிய நிலப்பரப்பை விடுவித்து விட்டு பொதுமக்களின் காணி விடுவிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளதாகவும், மாறாக தமது பூர்வீக குடி நிலங்கள் வீடுகள் என்பன படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதை தம்மால் விடுவிக்கப்படுள்ள நிலத்திலிருந்துகொண்டு பார்க்கமுடிவதாகவும், அந்த நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்வதோடு முகாம் அமைத்தும் வாழ்ந்துவருவதை பார்க்க முடிவதாகவும் பலாலி வடக்கு இல 254 பகுதி காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



இராணுவத்தினரின் காணி விடுவிப்பு; பலாலி வடக்கு மக்கள் ஏமாற்றம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் (03) யாழ்ப்பாணம் பலாலி வடக்கு இல 254 பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி நிலங்கள்  விடுவிக்கப்பட்டிருந்தது.இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒரு துண்டு நிலம்கூட பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சுதந்திரத்தினத்துக்கு முன்னர் தமது காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி காணி விடுவிப்பு நடைபெறும் இடத்துக்கு வருகைதந்து பார்த்த போது தமக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அரச நிலமாக காணப்பட்ட சிறிய நிலப்பரப்பை விடுவித்து விட்டு பொதுமக்களின் காணி விடுவிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளதாகவும், மாறாக தமது பூர்வீக குடி நிலங்கள் வீடுகள் என்பன படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதை தம்மால் விடுவிக்கப்படுள்ள நிலத்திலிருந்துகொண்டு பார்க்கமுடிவதாகவும், அந்த நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்வதோடு முகாம் அமைத்தும் வாழ்ந்துவருவதை பார்க்க முடிவதாகவும் பலாலி வடக்கு இல 254 பகுதி காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement