• Nov 26 2024

தமிழ்நாடு அரசையே ஏமாற்றத் துணிந்திருக்கும் போலியான பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள்...! samugammedia

Sharmi / Jan 12th 2024, 10:33 am
image

தமிழ்நாடு அரசையே ஏமாற்றத் துணிந்திருக்கும் போலியான பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள் என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் நேற்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு இடம்பெற்ற உலகத் தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாள் அன்று இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலினாலும் சன நெரிசலிலும் கொல்லப்பட்டவர்களது 50வது ஆண்டு நினைவஞ்சலியில் கலந்து கொள்வதற்காநான் யாழ்ப்பாணம் வந்துள்ளேன்.


இவ்வேளையில் எமது உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகத்தைக் கொண்டு கனடா தேசத்திலிருந்து எமது இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

 எமது இயக்கத்தின் இலங்கைக் கிளை உறுப்பினர்களோடு இணைந்து அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தின் இவ்வாண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழாவை சிறப்பாகக் கொண்டாடுவகையில் எமது கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.


இவ்வாறான சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 'போலியான' கிளையொன்றை மலேசியாவில் நிறுவி அதன் 'மூலகர்த்தா'வாக விளங்கும் ஒருவருடன் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் சில இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சில 'புல்லுருவிகள்' ஒன்று சேர்ந்து சென்னையில் 'போலியான' உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்ற பெயரில் சிறிய வைபவம் ஒன்றை நடத்தியுள்ளனர்.


அதற்கு தற்போதைய தமிழ்நாடு அரசின் அமைச்சர் பெருமகன் ஒருவரும் கலந்து கொண்டுள்ளார்.


இந்த ஏமாற்றுத் தனத்தை 'உண்மையான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர்களாகிய நாம் உலகெங்கும் பல நாடுகளில் இயங்கிவரும் எமது இயக்கத்தின் நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள் அனைவரும் கண்டு மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானோம்.


இவ்வாறான தமிழ்நாடு அரசாங்கத்தையே ஏமாற்றும் அளவிற்கு இந்த 'போலியான' புல்லுருவிகள்' துணிந்து விட்டார்களே என்று எண்ணி இவர்களது 'போலித்தனத்தை' வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற கலந்துரையாடியுள்ளோம். அத்துடன் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.


எனவே கனடாவில் தலைமையகத்தைக் கொண்டு சிறப்பாக இயங்கிவரும் 'உண்மையான உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயற்பாடுகளை விஸ்தரிக்கவும் அமெரிக்காவில் எமது இயக்கத்தின் பொன்விழாவை சிறப்பாக நடத்தவும் நாம் திட்டங்கள் வகுத்து செயற்பட்டு வருகின்றோம். எமது முயற்சிகளுக்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் நல்லாதரவை வழங்க வேண்டும். 


அத்துடன் 'போலியான' பெயரில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இந்த 'புல்லுருவிகளை' இனங்கண்டு ஒதுக்கவும் வேண்டுகின்றோம்.


மேலும். 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்களை ஸ்தாபகத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்றும் அவருக்குப் பின்னர் மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் வீரப்பன் அவர்களை தலைவராகத் தெரிவு செய்து அவர் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் சிறப்பான முறையில் எமது இயக்கத்தை வழிநடத்திச் சென்றார்.


எமது இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் மூன்றாகும். உலகெங்கும் பரந்து வாழும் எமது மக்கள் மற்றும் இளைய தலைமுறையைச் சேர்ந்த என அனைவரிடமும் பண்பாட்டுச் சீரழிகள் மற்றும் மொழியைப் புறக்கணிக்கும் பழக்கங்கள் போன்றைவை பரவி விடாமால் பாதுகாப்பது அல்லது அறிவூட்டுவது.

இரண்டாவது எமது தாயகமான இலங்கை மற்றும் தாய்த் தமிழகமான தமிழ்நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இடையில் தமிழர் பண்பாடு தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி அவர்களுக்கிடையில் நெருக்கமான உறவினை ஏற்படுத்துதல்.

மூன்றாவதாக கலாச்சாரத்தைப் புறக்கணிக்கும் நோக்கம் கொண்டவர்களுக்கு அறிவூட்டும் வகையில் கருத்தரங்குகளை நடத்துவது ஆகியவை ஆகும்.

இவ்வாறான நோக்கங்கள் கொண்ட எமது இயகத்தின் பெயருக்கு 'மாசு' ஏற்படுத்துவகையில் தமிழ்நாட்டிற்குச் சென்று அங்கு போலியான மற்றும் பொய்யான பரப்புரை செய்யும் 'புல்லுருவிகளை' இனங்கண்டு ஒதுக்கும் வகையில் எமது எதிர்காலச் செயற்பாடுகள் தீவிரமானவையாக இருக்கும் என்ற செய்தியையும் நான் பகிர்ந்து கொண்டுள்ளேன்.


இவ்வாறு 'உண்மையான'தும் கனடாவில் தலைமையகத்தை கொண்டதும். மேற்படி தலைமையகத்திற்கான உத்தியோகபூர்வமான பதிவு கனடாவின் மத்திய அரசின் கீழ் வரும் அமைச்சில் செய்யப்பட்டுள்ள நிலையில் எமது பயணம் இடைவிடாது தொடரும் என்ற நற்செய்தியையும் இத்தால் பகிர்ந்து கொள்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசையே ஏமாற்றத் துணிந்திருக்கும் போலியான பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள். samugammedia தமிழ்நாடு அரசையே ஏமாற்றத் துணிந்திருக்கும் போலியான பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள் என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் நேற்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு இடம்பெற்ற உலகத் தமிழாராச்சி மாநாட்டின் இறுதி நாள் அன்று இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலினாலும் சன நெரிசலிலும் கொல்லப்பட்டவர்களது 50வது ஆண்டு நினைவஞ்சலியில் கலந்து கொள்வதற்காக நான் யாழ்ப்பாணம் வந்துள்ளேன்.இவ்வேளையில் எமது உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகத்தைக் கொண்டு கனடா தேசத்திலிருந்து எமது இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். எமது இயக்கத்தின் இலங்கைக் கிளை உறுப்பினர்களோடு இணைந்து அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தின் இவ்வாண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழாவை சிறப்பாகக் கொண்டாடுவகையில் எமது கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.இவ்வாறான சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 'போலியான' கிளையொன்றை மலேசியாவில் நிறுவி அதன் 'மூலகர்த்தா'வாக விளங்கும் ஒருவருடன் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் சில இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சில 'புல்லுருவிகள்' ஒன்று சேர்ந்து சென்னையில் 'போலியான' உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்ற பெயரில் சிறிய வைபவம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதற்கு தற்போதைய தமிழ்நாடு அரசின் அமைச்சர் பெருமகன் ஒருவரும் கலந்து கொண்டுள்ளார்.இந்த ஏமாற்றுத் தனத்தை 'உண்மையான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர்களாகிய நாம் உலகெங்கும் பல நாடுகளில் இயங்கிவரும் எமது இயக்கத்தின் நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள் அனைவரும் கண்டு மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானோம்.இவ்வாறான தமிழ்நாடு அரசாங்கத்தையே ஏமாற்றும் அளவிற்கு இந்த 'போலியான' புல்லுருவிகள்' துணிந்து விட்டார்களே என்று எண்ணி இவர்களது 'போலித்தனத்தை' வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற கலந்துரையாடியுள்ளோம். அத்துடன் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.எனவே கனடாவில் தலைமையகத்தைக் கொண்டு சிறப்பாக இயங்கிவரும் 'உண்மையான உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயற்பாடுகளை விஸ்தரிக்கவும் அமெரிக்காவில் எமது இயக்கத்தின் பொன்விழாவை சிறப்பாக நடத்தவும் நாம் திட்டங்கள் வகுத்து செயற்பட்டு வருகின்றோம். எமது முயற்சிகளுக்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் நல்லாதரவை வழங்க வேண்டும். அத்துடன் 'போலியான' பெயரில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இந்த 'புல்லுருவிகளை' இனங்கண்டு ஒதுக்கவும் வேண்டுகின்றோம்.மேலும். 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்களை ஸ்தாபகத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்றும் அவருக்குப் பின்னர் மலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் வீரப்பன் அவர்களை தலைவராகத் தெரிவு செய்து அவர் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் சிறப்பான முறையில் எமது இயக்கத்தை வழிநடத்திச் சென்றார்.எமது இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் மூன்றாகும். உலகெங்கும் பரந்து வாழும் எமது மக்கள் மற்றும் இளைய தலைமுறையைச் சேர்ந்த என அனைவரிடமும் பண்பாட்டுச் சீரழிகள் மற்றும் மொழியைப் புறக்கணிக்கும் பழக்கங்கள் போன்றைவை பரவி விடாமால் பாதுகாப்பது அல்லது அறிவூட்டுவது.இரண்டாவது எமது தாயகமான இலங்கை மற்றும் தாய்த் தமிழகமான தமிழ்நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இடையில் தமிழர் பண்பாடு தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி அவர்களுக்கிடையில் நெருக்கமான உறவினை ஏற்படுத்துதல்.மூன்றாவதாக கலாச்சாரத்தைப் புறக்கணிக்கும் நோக்கம் கொண்டவர்களுக்கு அறிவூட்டும் வகையில் கருத்தரங்குகளை நடத்துவது ஆகியவை ஆகும்.இவ்வாறான நோக்கங்கள் கொண்ட எமது இயகத்தின் பெயருக்கு 'மாசு' ஏற்படுத்துவகையில் தமிழ்நாட்டிற்குச் சென்று அங்கு போலியான மற்றும் பொய்யான பரப்புரை செய்யும் 'புல்லுருவிகளை' இனங்கண்டு ஒதுக்கும் வகையில் எமது எதிர்காலச் செயற்பாடுகள் தீவிரமானவையாக இருக்கும் என்ற செய்தியையும் நான் பகிர்ந்து கொண்டுள்ளேன்.இவ்வாறு 'உண்மையான'தும் கனடாவில் தலைமையகத்தை கொண்டதும். மேற்படி தலைமையகத்திற்கான உத்தியோகபூர்வமான பதிவு கனடாவின் மத்திய அரசின் கீழ் வரும் அமைச்சில் செய்யப்பட்டுள்ள நிலையில் எமது பயணம் இடைவிடாது தொடரும் என்ற நற்செய்தியையும் இத்தால் பகிர்ந்து கொள்கின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement