• Jul 11 2025

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

Chithra / Jul 11th 2025, 7:40 am
image

  

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சை முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களில் பார்வையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் தேவைப்பட்டால், பரீட்சார்த்திகள் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்த விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் ஜூலை 28 வரை அழைக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 474,147 பரீட்சார்த்திகள் தோற்றினர்.

2024 க.பொ.த. சாதாரணப் பரீட்சை கடந்த மார்ச் 17 முதல் 26 வரை 3,663 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது   2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, பரீட்சை முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களில் பார்வையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் தேவைப்பட்டால், பரீட்சார்த்திகள் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும், பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்த விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் ஜூலை 28 வரை அழைக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 474,147 பரீட்சார்த்திகள் தோற்றினர்.2024 க.பொ.த. சாதாரணப் பரீட்சை கடந்த மார்ச் 17 முதல் 26 வரை 3,663 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement