• May 08 2024

பல வருடங்களாக குன்றும் குழியுமாக காணப்படும் வீதி..!மக்கள் விசனம்..!samugammedia

Sharmi / Jun 12th 2023, 12:33 pm
image

Advertisement

மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிட்டவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள வீதி புனரமைக்கபடாமல் உள்ளதாலேயே பாலத்தால் பயன் இல்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

மஸ்கெலியா - சாமிமலை பிரதான வீதிக்கு வருவதற்கான பிரவுன்சிக், எமலின் தோட்ட வீதி கடுமையாக சேதமடைந்துள்ளது.

இதனை புனரமைப்பதற்கு பல வருடங்களாகியும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வீதியில் நடந்துசெல்வதற்கு கூட முடியாத வகையில் குன்றும். குழியுமாக காணப்படுகின்றது.

சுமார் 2 கி.மீ தூரத்துக்கு முச்சக்கரவண்டியில் செல்வதற்காக இருந்தால்கூட ஆயிரம் ரூபா அறிவிப்படுகின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர். வீதி புனரமைக்கப்படாததால் மாணவர்கள், அரச அதிகாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தாலும் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீதியை விரைவில் புனரமைத்து தருமாறும் மக்கள் கோருகின்றனர்.


பல வருடங்களாக குன்றும் குழியுமாக காணப்படும் வீதி.மக்கள் விசனம்.samugammedia மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிட்டவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.அப்பகுதியில் உள்ள வீதி புனரமைக்கபடாமல் உள்ளதாலேயே பாலத்தால் பயன் இல்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.மஸ்கெலியா - சாமிமலை பிரதான வீதிக்கு வருவதற்கான பிரவுன்சிக், எமலின் தோட்ட வீதி கடுமையாக சேதமடைந்துள்ளது.இதனை புனரமைப்பதற்கு பல வருடங்களாகியும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வீதியில் நடந்துசெல்வதற்கு கூட முடியாத வகையில் குன்றும். குழியுமாக காணப்படுகின்றது. சுமார் 2 கி.மீ தூரத்துக்கு முச்சக்கரவண்டியில் செல்வதற்காக இருந்தால்கூட ஆயிரம் ரூபா அறிவிப்படுகின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர். வீதி புனரமைக்கப்படாததால் மாணவர்கள், அரச அதிகாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தாலும் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீதியை விரைவில் புனரமைத்து தருமாறும் மக்கள் கோருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement