• May 04 2024

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி..! - விடுமுறை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு! samugammedia

Chithra / Jun 12th 2023, 12:36 pm
image

Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையில் வருடாந்த எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இம்மாதம் 19ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் எசல பெரஹரா உற்சவம் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை 3ஆம் திகதி மஹா பெரஹரா இடம்பெற்று, மறுநாள் பெரஹரவுடன் ‘தியா கெப்பீம’ நிகழ்வுடன் பெரஹரா நிகழ்வுகள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெரஹரா திருவிழாவை முன்னிட்டு விசேட கடமைக்கு வரவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க மூன்று பாடசாலைகளின் கட்டிடங்களை பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.

இதன்படி, செல்லக்கதிர்காமம் மஹா வித்தியாலயம், தெட்டகமுவ மஹா வித்தியாலயம் மற்றும் கதிர்காமம் தேசிய பாடசாலை ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி. - விடுமுறை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு samugammedia வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையில் வருடாந்த எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இம்மாதம் 19ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இவ்வருடம் எசல பெரஹரா உற்சவம் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை 3ஆம் திகதி மஹா பெரஹரா இடம்பெற்று, மறுநாள் பெரஹரவுடன் ‘தியா கெப்பீம’ நிகழ்வுடன் பெரஹரா நிகழ்வுகள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பெரஹரா திருவிழாவை முன்னிட்டு விசேட கடமைக்கு வரவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க மூன்று பாடசாலைகளின் கட்டிடங்களை பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.இதன்படி, செல்லக்கதிர்காமம் மஹா வித்தியாலயம், தெட்டகமுவ மஹா வித்தியாலயம் மற்றும் கதிர்காமம் தேசிய பாடசாலை ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement