• Nov 19 2024

மீண்டும் சூடுபிடித்துள்ள ரஷ்ய – உக்ரைன் போர்

Tharun / May 16th 2024, 6:23 pm
image

ரஷ்ய-உக்ரைன் போர் மீண்டும் உக்கிரமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

கார்கிவ் எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்திய வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற மோதலில் 3 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

7,500க்கும் மேற்பட்ட மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது.

இருப்பினும், ரஷ்ய படையெடுப்பை அனுமதிக்க மாட்டோம் என்று உக்ரைன் வலியுறுத்துகிறது.

படையெடுப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் உடனடியாக நிறுத்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தீர்மானித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி நாளைய தினம் ஸ்பெயின் மன்னரை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் சூடுபிடித்துள்ள ரஷ்ய – உக்ரைன் போர் ரஷ்ய-உக்ரைன் போர் மீண்டும் உக்கிரமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.அதாவது உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.கார்கிவ் எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்திய வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேற்று இடம்பெற்ற மோதலில் 3 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.7,500க்கும் மேற்பட்ட மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளது.இருப்பினும், ரஷ்ய படையெடுப்பை அனுமதிக்க மாட்டோம் என்று உக்ரைன் வலியுறுத்துகிறது.படையெடுப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் உடனடியாக நிறுத்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தீர்மானித்துள்ளார்.உக்ரைன் ஜனாதிபதி நாளைய தினம் ஸ்பெயின் மன்னரை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement