• May 18 2024

கூடாராம் போட்டு போராட்டத்தில் ஈடுபடும் மணல் மாபியாக்கள்..! பெளத்த பிக்குவும் ஆதரவு! samugammedia

Chithra / May 9th 2023, 5:15 pm
image

Advertisement

மன்னார் மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் அனுமதி இன்றியும், அனுமதிக்கு அதிகமாகவும், அனுமதி வழங்கிய பகுதியில் இருந்து வேறு இடத்திலும் மணல் அகழ்வில் ஈடுபட்ட மணல் மாபியா கும்பல் ஒன்று இன்றைய தினம் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதி இன்றி காடுகளை அழித்து மணல் அகழ்வில் ஈடுபட்டதுடன் மாந்தை பிரதேச செயலாளருடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரின் தலைமையிலே குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றுள்ளது.

மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக டிப்பர் வாகனங்களை நிறுத்தி கூடாரம் அமைத்து குறித்த குழுவினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் பிரதேச செயலாளரும் குறித்த போராட்ட காரர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் காணப்படுவதாக சந்தேகம் எழுகின்றது.


அரச சேவைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறித்த குழு கூடாரம் அமைத்து பிரதேச செயலக நுழைவாயில்களுக்கு முன்பாக டிப்பர் வாகனங்களை நிறுத்தி போராட்டம் மேற்கொண்டாலும் பிரதேச செயலாளர் எந்த ஒரு முறைப்பாட்டையும் பொலிஸாரிடம் பதிவு செய்யவில்லை.

மேலும் முருங்கன் விகாராதி பதியும் மணல் மாபியாக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கூடாராம் போட்டு போராட்டத்தில் ஈடுபடும் மணல் மாபியாக்கள். பெளத்த பிக்குவும் ஆதரவு samugammedia மன்னார் மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் அனுமதி இன்றியும், அனுமதிக்கு அதிகமாகவும், அனுமதி வழங்கிய பகுதியில் இருந்து வேறு இடத்திலும் மணல் அகழ்வில் ஈடுபட்ட மணல் மாபியா கும்பல் ஒன்று இன்றைய தினம் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதி இன்றி காடுகளை அழித்து மணல் அகழ்வில் ஈடுபட்டதுடன் மாந்தை பிரதேச செயலாளருடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரின் தலைமையிலே குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றுள்ளது.மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக டிப்பர் வாகனங்களை நிறுத்தி கூடாரம் அமைத்து குறித்த குழுவினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் பிரதேச செயலாளரும் குறித்த போராட்ட காரர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் காணப்படுவதாக சந்தேகம் எழுகின்றது.அரச சேவைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறித்த குழு கூடாரம் அமைத்து பிரதேச செயலக நுழைவாயில்களுக்கு முன்பாக டிப்பர் வாகனங்களை நிறுத்தி போராட்டம் மேற்கொண்டாலும் பிரதேச செயலாளர் எந்த ஒரு முறைப்பாட்டையும் பொலிஸாரிடம் பதிவு செய்யவில்லை.மேலும் முருங்கன் விகாராதி பதியும் மணல் மாபியாக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement