• Nov 23 2024

வட்டு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதியின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்..!

Sharmi / Jul 17th 2024, 5:04 pm
image

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதியானது இன்றையதினம்(17)   திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம், நலன்புரிச்சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன.

குறித்த வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதியானது பல்லாண்டு காலமாக இயங்காமல் காணப்பட்டது.

இந்நிலையில் வைத்தியசாலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் அதிகாரி எஸ்.செந்தூரனின் கடின முயற்சி காரணமாக இந்த விடுதியானது மீண்டும் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டதுடன் விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பொறுப்பு வைத்திய அதிகாரி எஸ்.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மஹிபால, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.பத்திரன, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பதவி நிலை வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள், நலன்புரிச் சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


வட்டு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதியின் சேவைகள் மீண்டும் ஆரம்பம். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதியானது இன்றையதினம்(17)   திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம், நலன்புரிச்சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன.குறித்த வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதியானது பல்லாண்டு காலமாக இயங்காமல் காணப்பட்டது. இந்நிலையில் வைத்தியசாலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் அதிகாரி எஸ்.செந்தூரனின் கடின முயற்சி காரணமாக இந்த விடுதியானது மீண்டும் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டதுடன் விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.பொறுப்பு வைத்திய அதிகாரி எஸ்.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மஹிபால, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.பத்திரன, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், பதவி நிலை வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள், நலன்புரிச் சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement