• Apr 01 2025

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி; வவுனியாவில் இரு பெண்கள் செய்த செயல்

Chithra / Mar 30th 2025, 2:56 pm
image

 

வவுனியா, நகரசபைப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரின் சங்கிலியை இரு பெண்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை பூங்காவில் சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 

இதன்போது அச் சிறுமியின் அருகில் சென்ற இரு பெண்கள் அச் சிறுமியுடன் கதைப்பது போன்று பாசாங்கு செய்து  சிறுமி அணிந்திருந்த சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார்   தெரிவித்தனர். 

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி; வவுனியாவில் இரு பெண்கள் செய்த செயல்  வவுனியா, நகரசபைப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரின் சங்கிலியை இரு பெண்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை பூங்காவில் சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதன்போது அச் சிறுமியின் அருகில் சென்ற இரு பெண்கள் அச் சிறுமியுடன் கதைப்பது போன்று பாசாங்கு செய்து  சிறுமி அணிந்திருந்த சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிசார்   தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement