• May 20 2024

75வது சுதந்திரதினத்தை சிங்களவர்களே புறக்கணிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - துரோகமே இதற்கு காரணம்.!

Tamil nila / Feb 1st 2023, 6:12 pm
image

Advertisement

இலங்கையில் கடந்த 75 ஆண்டுகளாக தமிழினம் அடிமை வாழ்கையையே வாழ்ந்து கொண்டிருப்பதாக வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் தமிழினம் அழிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டே வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இன்று எமது சமூகம் செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

கடந்த 74 ஆண்டுகளாக சிங்கள மக்கள் தாம் சுதந்திர காற்றையே சுவாசிப்பதாக எண்ணியிருந்த நிலையில் 

மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்த துரோகத்தை தற்போது அவர்களும் உணர ஆரம்பித்துள்ளதாக தர்மலிங்கம் நடனேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


இன்று 75ஆவது சதந்திரதினத்தை புறக்கணிக்கவேண்டுமென சிங்களவர்களே கூறும் அளவிற்கு ஆட்சியாளர்களின்  துரோகத்தனங்கள் வெளிப்பட்டுள்ளதாக வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே தமிழ் மக்களை அனைத்து வகையிலும் அடக்கி ஒடுக்குகின்ற மனநிலையினை கொண்டுள்ள சிங்கள தலைவர்கள் இருக்கும்  வரையில் தமிழர்களுக்கு சுதந்திர தினம் என்பது ஒரு காரிநாளே என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

75வது சுதந்திரதினத்தை சிங்களவர்களே புறக்கணிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - துரோகமே இதற்கு காரணம். இலங்கையில் கடந்த 75 ஆண்டுகளாக தமிழினம் அடிமை வாழ்கையையே வாழ்ந்து கொண்டிருப்பதாக வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் தமிழினம் அழிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டே வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்று எமது சமூகம் செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்திருந்தார்.கடந்த 74 ஆண்டுகளாக சிங்கள மக்கள் தாம் சுதந்திர காற்றையே சுவாசிப்பதாக எண்ணியிருந்த நிலையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்த துரோகத்தை தற்போது அவர்களும் உணர ஆரம்பித்துள்ளதாக தர்மலிங்கம் நடனேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.இன்று 75ஆவது சதந்திரதினத்தை புறக்கணிக்கவேண்டுமென சிங்களவர்களே கூறும் அளவிற்கு ஆட்சியாளர்களின்  துரோகத்தனங்கள் வெளிப்பட்டுள்ளதாக வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே தமிழ் மக்களை அனைத்து வகையிலும் அடக்கி ஒடுக்குகின்ற மனநிலையினை கொண்டுள்ள சிங்கள தலைவர்கள் இருக்கும்  வரையில் தமிழர்களுக்கு சுதந்திர தினம் என்பது ஒரு காரிநாளே என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement