• Apr 27 2024

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்..! முடங்கும் வைத்தியசாலைகள்..? samugammedia

Chithra / Nov 1st 2023, 3:49 pm
image

Advertisement

 

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.

24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் நாளை (02) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

பின்னர் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 3ஆம் திகதியும், வடமேற்கு மாகாணத்தில் 6ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்தில் 7ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது. தென் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் எதிர்வரும் 09ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

எதிர்வரும் 10ஆம் திகதி மேல்மாகாண அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம். முடங்கும் வைத்தியசாலைகள். samugammedia  நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் நாளை (02) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.பின்னர் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 3ஆம் திகதியும், வடமேற்கு மாகாணத்தில் 6ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணத்தில் 7ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது. தென் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் எதிர்வரும் 09ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.எதிர்வரும் 10ஆம் திகதி மேல்மாகாண அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement