• May 03 2024

வடமராட்சி கிழக்கில் இருந்து விடை பெற்ற மருதமடு அன்னையின் திருச்சொரூபம்...!

Sharmi / Apr 20th 2024, 2:47 pm
image

Advertisement

மடுமாதாவின் முடிசூட்டுவிழாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடுமாதா திருச்சொரூபம் கடந்த வாரம் யாழ் மாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்டதுடன், யாழ் மறைமாவட்ட பங்குகளுக்கு கொண்டு  செல்லப்பட்டு விசேட வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில்,  மருதமடு அன்னையின் திருச்சொரூபம்  செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் தேவாலயத்திலிருந்து இன்று(20) காலை 06 மணியளவில் புறப்பட்டு  கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தை வந்தடைந்தது.

பக்தர்களின் மிக பிரமாண்ட வரவேற்புடன் மருத மடு அன்னை,  மருதங்கேணி வீதியூடாக பயணித்து தாளையடி  புனித அந்தோனியார்  ஆலய வீதியை அடைந்து.

இதன்போது கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி சைவ மக்களின் பெரும் வரவேற்புடன், மருதமடு அன்னை கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தை வந்தடைந்தார்.

இதேவேளை அன்னையின் திருச்சொருப பவனிக்கு பாதுகாப்பிற்காக மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான  பொலிஸார், விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர் ஆகியோர்  பாதுகாப்பு, வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டனர்.

அன்னையின் திருச் சொரூபம் இன்று மதியம் 12 மணியளவில் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து பளைக்கு எடுத்து செல்லப்பட்டது.


வடமராட்சி கிழக்கில் இருந்து விடை பெற்ற மருதமடு அன்னையின் திருச்சொரூபம். மடுமாதாவின் முடிசூட்டுவிழாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடுமாதா திருச்சொரூபம் கடந்த வாரம் யாழ் மாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்டதுடன், யாழ் மறைமாவட்ட பங்குகளுக்கு கொண்டு  செல்லப்பட்டு விசேட வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில்,  மருதமடு அன்னையின் திருச்சொரூபம்  செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் தேவாலயத்திலிருந்து இன்று(20) காலை 06 மணியளவில் புறப்பட்டு  கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தை வந்தடைந்தது.பக்தர்களின் மிக பிரமாண்ட வரவேற்புடன் மருத மடு அன்னை,  மருதங்கேணி வீதியூடாக பயணித்து தாளையடி  புனித அந்தோனியார்  ஆலய வீதியை அடைந்தது.இதன்போது கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி சைவ மக்களின் பெரும் வரவேற்புடன், மருதமடு அன்னை கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தை வந்தடைந்தார்.இதேவேளை அன்னையின் திருச்சொருப பவனிக்கு பாதுகாப்பிற்காக மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான  பொலிஸார், விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர் ஆகியோர்  பாதுகாப்பு, வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டனர்.அன்னையின் திருச் சொரூபம் இன்று மதியம் 12 மணியளவில் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து பளைக்கு எடுத்து செல்லப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement