• Nov 26 2024

நாடளாவிய ரீதியில் தொடரும் 'யுக்திய' நடவடிக்கை...! 705 சந்தேக நபர்கள் கைது...!

Sharmi / Feb 21st 2024, 10:17 am
image

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் 'யுக்திய' நடவடிக்கையில் 705 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 561 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 144 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 705 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து, 190 கிராம் 792 மில்லி கிராம் ஹெராயின், பனி 69 கிராம் 727 மி.கி, கஞ்சா 04 கிலோ 296 கிராம், 711 கஞ்சா செடிகள், மாவா 01 கிலோ 34 கிராம், மதனா மோதக 02கிலோ 173கிராம், 305 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

 மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 144 சந்தேக நபர்களில் 13 சந்தேக நபர்களுக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 122 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், குற்றங்களுக்காக தேடப்படும் 07 சந்தேக நபர்களும், 02 சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


நாடளாவிய ரீதியில் தொடரும் 'யுக்திய' நடவடிக்கை. 705 சந்தேக நபர்கள் கைது. கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் 'யுக்திய' நடவடிக்கையில் 705 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 561 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 144 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 705 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து, 190 கிராம் 792 மில்லி கிராம் ஹெராயின், பனி 69 கிராம் 727 மி.கி, கஞ்சா 04 கிலோ 296 கிராம், 711 கஞ்சா செடிகள், மாவா 01 கிலோ 34 கிராம், மதனா மோதக 02கிலோ 173கிராம், 305 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 144 சந்தேக நபர்களில் 13 சந்தேக நபர்களுக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 122 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், குற்றங்களுக்காக தேடப்படும் 07 சந்தேக நபர்களும், 02 சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement