சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 12 ஆம் திகதி தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதையடுத்து அவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்தன.
பிறந்தநாளை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன், குறிப்பாக அவரது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவிட்டார் சூப்பர் ஸ்டார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளங்களில் அந்தப் படத்தைப் பகிர்ந்து, 'இதைவிட அழகான ஒன்றை படம் பிடிக்க முடியாது. இதுபோன்ற சில பிணைப்புகளுக்கு தலைப்பிட முடியாது. எனது பர்த்டே பாயுடன் என் பையன்களுடன்!' எனக் குறிப்பிட்டிருந்தார்.
பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சூப்பர் ஸ்டார் எடுத்துக் கொண்ட அந்தப் படம் இணையத்தில் வைரலானது.
அதே நேரத்தில் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருப்பதாக கமெண்டுகளில் தெரிவித்தனர் ரசிகர்கள். ர
ஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான படங்களைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ரசிகர்கள் தங்கள் அன்புக்குரிய நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை திருவிழாவாகக் கொண்டாடினர்.
அவரும் அவரின் திரைப்படங்களை உள்ளடக்கிய ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
ரஜினிகாந்தின் வரவிருக்கும் படங்களான 'ஜெயிலர்' மற்றும் 'லால் சலாம்' ஆகியவற்றின் இரண்டு அப்டேட்டுகள் அந்தந்த தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பேரன்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 12 ஆம் திகதி தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன், குறிப்பாக அவரது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவிட்டார் சூப்பர் ஸ்டார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளங்களில் அந்தப் படத்தைப் பகிர்ந்து, 'இதைவிட அழகான ஒன்றை படம் பிடிக்க முடியாது. இதுபோன்ற சில பிணைப்புகளுக்கு தலைப்பிட முடியாது. எனது பர்த்டே பாயுடன் என் பையன்களுடன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சூப்பர் ஸ்டார் எடுத்துக் கொண்ட அந்தப் படம் இணையத்தில் வைரலானது. அதே நேரத்தில் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருப்பதாக கமெண்டுகளில் தெரிவித்தனர் ரசிகர்கள். ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான படங்களைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.ரசிகர்கள் தங்கள் அன்புக்குரிய நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை திருவிழாவாகக் கொண்டாடினர். அவரும் அவரின் திரைப்படங்களை உள்ளடக்கிய ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. ரஜினிகாந்தின் வரவிருக்கும் படங்களான 'ஜெயிலர்' மற்றும் 'லால் சலாம்' ஆகியவற்றின் இரண்டு அப்டேட்டுகள் அந்தந்த தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.