• May 17 2024

வடகிழக்கிலுள்ள தமிழ்த தேசிய கட்சிகள் மீது - புலம்பெயர் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை.! இதற்கு தமிழ் கட்சிகள் பதில் கூறுவார்களா.?? samugammedia

Tamil nila / May 21st 2023, 5:56 pm
image

Advertisement

இலங்கையிலுள்ள, தமிழ் அரசியல் கட்சிகள் மீது, புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது நம்பிக்கை இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைக்க விரும்புகின்றனர். 

எம்முடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினர்.

குறிப்பாக, ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர். 

உண்மையில், அவர்கள், நெருக்கடியான இந்த நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராகவே உள்ளனர். 

தமிழ் அரசியல் கட்சிகள் மீது புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது நம்பிக்கை இல்லை. 

அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.

இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் வளமான மாற்றத்தையே புலம்பெயர் தமிழர்கள் விரும்புகின்றனர். 

வடக்கு, கிழக்கில் உள்ள இளையோரும் அதனையே கோருகின்றனர். 

எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வடக்குக்கு மீண்டும் செல்லவுள்ளேன். 

வடகிழக்கிலுள்ள தமிழ்த தேசிய கட்சிகள் மீது - புலம்பெயர் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை. இதற்கு தமிழ் கட்சிகள் பதில் கூறுவார்களா. samugammedia இலங்கையிலுள்ள, தமிழ் அரசியல் கட்சிகள் மீது, புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது நம்பிக்கை இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைக்க விரும்புகின்றனர். எம்முடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினர்.குறிப்பாக, ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர். உண்மையில், அவர்கள், நெருக்கடியான இந்த நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராகவே உள்ளனர். தமிழ் அரசியல் கட்சிகள் மீது புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது நம்பிக்கை இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் வளமான மாற்றத்தையே புலம்பெயர் தமிழர்கள் விரும்புகின்றனர். வடக்கு, கிழக்கில் உள்ள இளையோரும் அதனையே கோருகின்றனர். எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வடக்குக்கு மீண்டும் செல்லவுள்ளேன். 

Advertisement

Advertisement

Advertisement