எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் 55 வயதான தாயும் அவரது 25 வயதுடைய மகனும் ஆபத்தான நிலையில் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இன்று (11) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இருவரும் முதலில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அயலவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாயும் மகனும் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த தாயும் மகனும் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்குச் செல்லும் வழியில் இருவரும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அயலவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாயும் மகனுக்கும் ஏற்பட்ட சோகம். எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் 55 வயதான தாயும் அவரது 25 வயதுடைய மகனும் ஆபத்தான நிலையில் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இன்று (11) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்த இருவரும் முதலில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.அயலவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாயும் மகனும் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.காயமடைந்த தாயும் மகனும் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்குச் செல்லும் வழியில் இருவரும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.