• May 17 2024

சீன விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்த மூவர் பூமிக்குத் திரும்பினர்

harsha / Dec 5th 2022, 6:25 pm
image

Advertisement

சீனா நிர்மாணித்த விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்த சீன விண்வெளி வீரர்கள் மூவர் நேற்றிரவு பூமிக்குத் திரும்பினர்.

சேன் டோங், லியு யாங், காய் ஸுஸே ஆகியோரே இவ்வாறு பூமிக்குத் திரும்பினர். இவர்களில் லியூ யாங் சீனாவினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதலாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூவரும், கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, சீனாவின் தியான்கோங் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தனர்.

இவர்களை ஏற்றிவந்த, விண்கலம் சீனாவிலுள்ள உள் மொங்கோலியா சுயாட்சிப் பிராந்தியத்திலுள்ள டோங்பெங் விண்வெளி தளத்தில் நேற்றிரவு தரையிறங்கியது. இம்மூவரும் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

சீன விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்த மூவர் பூமிக்குத் திரும்பினர் சீனா நிர்மாணித்த விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்த சீன விண்வெளி வீரர்கள் மூவர் நேற்றிரவு பூமிக்குத் திரும்பினர்.சேன் டோங், லியு யாங், காய் ஸுஸே ஆகியோரே இவ்வாறு பூமிக்குத் திரும்பினர். இவர்களில் லியூ யாங் சீனாவினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதலாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும், கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, சீனாவின் தியான்கோங் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தனர்.இவர்களை ஏற்றிவந்த, விண்கலம் சீனாவிலுள்ள உள் மொங்கோலியா சுயாட்சிப் பிராந்தியத்திலுள்ள டோங்பெங் விண்வெளி தளத்தில் நேற்றிரவு தரையிறங்கியது. இம்மூவரும் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement