நாட்டில் உள்ள காட்டு யானைகள் கணக்கெடுப்பை எதிர்வரும் ஆவணி மாத நடுப்பகுதியில் நடத்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டதாகவும்,எனினும் அப்போது ஏற்பட்ட கோவிட் அனர்த்தம் மற்றும் எதிர்பாராத மழை காரணமாக கணக்கெடுப்பை நடத்த முடியாமல் போனதாகவும் வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஆவணி மாத நடுப்பகுதியில் காட்டு யானைகள் கணக்கெடுப்பை நடத்த வனவிலங்கு திணைக்களம் தற்போது ஏற்பாடுகளை செய்துள்ளது.
வனவிலங்கு வலய மட்டத்தில் கள உத்தியோகத்தர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்க ஆரம்பித்துள்ளதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள காட்டு யானைகளை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம். நாட்டில் உள்ள காட்டு யானைகள் கணக்கெடுப்பை எதிர்வரும் ஆவணி மாத நடுப்பகுதியில் நடத்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டதாகவும்,எனினும் அப்போது ஏற்பட்ட கோவிட் அனர்த்தம் மற்றும் எதிர்பாராத மழை காரணமாக கணக்கெடுப்பை நடத்த முடியாமல் போனதாகவும் வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டு ஆவணி மாத நடுப்பகுதியில் காட்டு யானைகள் கணக்கெடுப்பை நடத்த வனவிலங்கு திணைக்களம் தற்போது ஏற்பாடுகளை செய்துள்ளது.வனவிலங்கு வலய மட்டத்தில் கள உத்தியோகத்தர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்க ஆரம்பித்துள்ளதாகவும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.