மன்னார் சாவற்கட்டு பகுதியில் தலைக் கவசத்தினுள் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு வந்த 31 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் வழிகாட்டலின் கீழ் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் சாவற்கட்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடத்தல் தீவு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் தலைகவசத்தின் உட்பகுதியினும் சூட்சமமான முறையில் 20 கிராம் 850 மில்லிகிராமம் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்த நிலையின் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ள மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் அதிரடியாக கைது. வெளியான காரணம்.samugammedia மன்னார் சாவற்கட்டு பகுதியில் தலைக் கவசத்தினுள் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு வந்த 31 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் வழிகாட்டலின் கீழ் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் சாவற்கட்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.விடத்தல் தீவு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் தலைகவசத்தின் உட்பகுதியினும் சூட்சமமான முறையில் 20 கிராம் 850 மில்லிகிராமம் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்த நிலையின் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ள மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.