• Sep 24 2024

வடகிழக்குதான் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதை வெளிப்படுத்திய யூலை கலவரம்- அருட்தந்தை ஜெகதாஸ் தெரிவிப்பு..! samugammedia

Sharmi / Aug 1st 2023, 2:22 pm
image

Advertisement

வடகிழக்குதான் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதை வெளிப்படுத்திய நாளாக யூலை கலவர நாள் அமைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் அமைப்புகள் இணைந்து ஏற்பாடுசெய்த யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு ஊறணியில் உள்ள அமெரிக்க மிஷனில் நடைபெற்றது.

சிவில் சமூக செயற்பாட்டாளரும் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மேலாளருமான அருட்தந்தை லூத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,அருட்தந்தையர்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மெழுகு திரி ஒளியேற்றப்பட்டு உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பிரதான சுடர் முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்தவரினால் ஏற்பட்டு யூலை படுகொலை நினைவு தினம் நினைவுகூரப்பட்டது.

இங்கு  கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜெகதாஸ்,

திருநெல்வேலி, தபால்பெட்டி சந்தியில் நடாத்தப்பட்ட இராணுவத்திற்கு எதிரான கண்ணிவெடி தாக்குதலுடன் யூலை கலவரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.ஆனால் இந்த யூலை கலவரம் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு கண்ணிவெடி தாக்குதல்தான் காரணம் அல்ல.அரசினால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.


அன்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர், தான் அக்காலப்பகுதியில் கொழும்பில் பணியாற்றியபோது யூலை கலவரம் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் தமிழர்கள் தொடர்பான பதிவுகளை பொலிஸ் நிலையங்கள் ஊடாக அக்காலத்தில் முன்னெடுத்திருந்தனர்.இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் தமிழர் செறிந்துவாழும் பகுதிகளில் பொலிஸ் நிலையங்களினால் தமிழர்கள் தொடர்பான பதிவுகளைப்பெற்றதாகும்.எந்த சட்டநடைமுறையும் இல்லாமல் திடீர் என்று அவ்வாறு தகவல்கள் திரட்டப்பட்டன.தகவல்கள் திரட்டப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னரே யூலை கலவரம் திட்டமிடப்பட்டது.

யூலை கலவரம் நடைபெறுவதற்கு முன்பாக யாழ் பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களும் இராணுவமும் படுகொலைசெய்யப்பட்டதாக தெற்கில் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் பொரளையில் இராணுவத்தின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றதன் பின்னர் 26ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டிமணி,தங்கத்துரை,ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களின் அனுசரணையுடனும் சக அரசியல் கைதிகள் தாக்குதல் மேற்கொண்டு படுகொலைசெய்தனர்.கறுப்பு யூலையின் தொடக்க சம்பவம் அதுவாகும்.அதன் பின்னர் கொழும்பு தலைநகரில் 3000க்கும் அதிகமான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டதுடன் அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன.

அதனை தொடர்ந்து மலையக மக்களும் கொன்றொழிக்கப்பட்டனர்.இன்று நாங்கள் அவர்களின் 200வது ஆண்டை நினைவுகூர்ந்துவருகின்றோம்.மலையக மக்கள் எங்கு செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களின் லயன்குடியிருப்புகள் அழிக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்கள்.அதன்போது மலையக மக்களும் கொழும்பு தமிழ் மக்களும் வடகிழக்கிற்கு புகழிடம் தேடிவந்த நாளாகவும் இது காணப்படுகின்றது.


இலங்கை தீப்பற்றி எரிந்தது.இலங்கை அரசாங்கம் தனது அரச பயங்கரவாதத்தின் கோரமுகத்தினை இந்த நாட்டிலிருந்து இன்னுமொரு இனத்தின் மீது திணித்த நாள்.மிகப்பெரிய இன அழிப்பின் ஆரம்பப்புள்ளி நிகழ்த்தப்பட்டநாள்.

தமிழ் மக்கள் தங்களது உயிரைக்காப்பற்ற ஓடியபோது இந்த நாட்டின் ஜனாதிபதியாகயிருந்த ஜேஆர் ஜயவர்த்தன சமாதானம் என்றால் சமாதானம் போர் என்றால் போர் என்று கூறினார்.அந்த காலத்தில் இனக்குரோதமும் கொலைவெறியும் சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிகம்பெற்றிருந்தது.தமிழர்களின் அகிம்சை போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரினாமம் அடைவதற்கு இந்த வன்முறை வழியேற்படுத்தியது.


எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்த இனப்படுகொலையினை நாங்கள் நினைவுகூறுகின்றோம்.இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது.எமது சமூகம் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.


வடகிழக்குதான் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதை வெளிப்படுத்திய யூலை கலவரம்- அருட்தந்தை ஜெகதாஸ் தெரிவிப்பு. samugammedia வடகிழக்குதான் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதை வெளிப்படுத்திய நாளாக யூலை கலவர நாள் அமைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் அமைப்புகள் இணைந்து ஏற்பாடுசெய்த யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு ஊறணியில் உள்ள அமெரிக்க மிஷனில் நடைபெற்றது.சிவில் சமூக செயற்பாட்டாளரும் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மேலாளருமான அருட்தந்தை லூத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை க.ஜெகதாஸ்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,அருட்தந்தையர்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது மெழுகு திரி ஒளியேற்றப்பட்டு உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பிரதான சுடர் முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்தவரினால் ஏற்பட்டு யூலை படுகொலை நினைவு தினம் நினைவுகூரப்பட்டது.இங்கு  கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜெகதாஸ்,திருநெல்வேலி, தபால்பெட்டி சந்தியில் நடாத்தப்பட்ட இராணுவத்திற்கு எதிரான கண்ணிவெடி தாக்குதலுடன் யூலை கலவரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.ஆனால் இந்த யூலை கலவரம் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு கண்ணிவெடி தாக்குதல்தான் காரணம் அல்ல.அரசினால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது.அன்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர், தான் அக்காலப்பகுதியில் கொழும்பில் பணியாற்றியபோது யூலை கலவரம் நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் தமிழர்கள் தொடர்பான பதிவுகளை பொலிஸ் நிலையங்கள் ஊடாக அக்காலத்தில் முன்னெடுத்திருந்தனர்.இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் தமிழர் செறிந்துவாழும் பகுதிகளில் பொலிஸ் நிலையங்களினால் தமிழர்கள் தொடர்பான பதிவுகளைப்பெற்றதாகும்.எந்த சட்டநடைமுறையும் இல்லாமல் திடீர் என்று அவ்வாறு தகவல்கள் திரட்டப்பட்டன.தகவல்கள் திரட்டப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னரே யூலை கலவரம் திட்டமிடப்பட்டது.யூலை கலவரம் நடைபெறுவதற்கு முன்பாக யாழ் பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களும் இராணுவமும் படுகொலைசெய்யப்பட்டதாக தெற்கில் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் பொரளையில் இராணுவத்தின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றதன் பின்னர் 26ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டிமணி,தங்கத்துரை,ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களின் அனுசரணையுடனும் சக அரசியல் கைதிகள் தாக்குதல் மேற்கொண்டு படுகொலைசெய்தனர்.கறுப்பு யூலையின் தொடக்க சம்பவம் அதுவாகும்.அதன் பின்னர் கொழும்பு தலைநகரில் 3000க்கும் அதிகமான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டதுடன் அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன.அதனை தொடர்ந்து மலையக மக்களும் கொன்றொழிக்கப்பட்டனர்.இன்று நாங்கள் அவர்களின் 200வது ஆண்டை நினைவுகூர்ந்துவருகின்றோம்.மலையக மக்கள் எங்கு செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களின் லயன்குடியிருப்புகள் அழிக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்கள்.அதன்போது மலையக மக்களும் கொழும்பு தமிழ் மக்களும் வடகிழக்கிற்கு புகழிடம் தேடிவந்த நாளாகவும் இது காணப்படுகின்றது.இலங்கை தீப்பற்றி எரிந்தது.இலங்கை அரசாங்கம் தனது அரச பயங்கரவாதத்தின் கோரமுகத்தினை இந்த நாட்டிலிருந்து இன்னுமொரு இனத்தின் மீது திணித்த நாள்.மிகப்பெரிய இன அழிப்பின் ஆரம்பப்புள்ளி நிகழ்த்தப்பட்டநாள்.தமிழ் மக்கள் தங்களது உயிரைக்காப்பற்ற ஓடியபோது இந்த நாட்டின் ஜனாதிபதியாகயிருந்த ஜேஆர் ஜயவர்த்தன சமாதானம் என்றால் சமாதானம் போர் என்றால் போர் என்று கூறினார்.அந்த காலத்தில் இனக்குரோதமும் கொலைவெறியும் சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிகம்பெற்றிருந்தது.தமிழர்களின் அகிம்சை போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரினாமம் அடைவதற்கு இந்த வன்முறை வழியேற்படுத்தியது.எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்த இனப்படுகொலையினை நாங்கள் நினைவுகூறுகின்றோம்.இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது.எமது சமூகம் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement