• Sep 20 2024

சிறுவர்களை வன்புனர்வுக்கு உட்படுத்திய தேரர் - விசாரணை பின்னனியில் அதிர்ச்சி தகவல்!

Tamil nila / Jan 13th 2023, 6:52 pm
image

Advertisement

சிறுவர் இல்ல சிறுவர்களை வன்புனர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ரன்முத்துகலை, கடவத்தை விகாரையை சேர்ந்த களனியே சுதம்ம தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த தேரர் நேற்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


ரன்முத்துகல சிறுவர் இல்லத்தில் 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் வன்புனர்விற்கு உட்படுத்திப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டமை குறித்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.



சிறுவர் இல்லத்தின் வயது வந்தவர்களால் குறித்த தேரருக்கு தகாத நடவடிக்கைகளுக்கு இருவர் வழங்கப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.


சிறுவர்களை வழங்கும் வயது வந்தவர்களுக்கு தலா 1000 ரூபாவும், வன்புனர்விற்கு உள்ளான சிறுவர்களுக்கு தலா 500 ரூபாவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தேரர் வழங்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.


அதுமட்டுமின்றி, சிறுவர்களை தகாத நடவடிக்கைகளுக்காக தமது விகாரைக்கு வழங்கிய வயது வந்த சிறுவர்களுக்கு நவீன கையடக்கத் தொலைபேசிகளை தேரர் வழங்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது


சிறுவர்களை வன்புனர்வுக்கு உட்படுத்திய தேரர் - விசாரணை பின்னனியில் அதிர்ச்சி தகவல் சிறுவர் இல்ல சிறுவர்களை வன்புனர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ரன்முத்துகலை, கடவத்தை விகாரையை சேர்ந்த களனியே சுதம்ம தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த தேரர் நேற்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.ரன்முத்துகல சிறுவர் இல்லத்தில் 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் வன்புனர்விற்கு உட்படுத்திப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டமை குறித்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.சிறுவர் இல்லத்தின் வயது வந்தவர்களால் குறித்த தேரருக்கு தகாத நடவடிக்கைகளுக்கு இருவர் வழங்கப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.சிறுவர்களை வழங்கும் வயது வந்தவர்களுக்கு தலா 1000 ரூபாவும், வன்புனர்விற்கு உள்ளான சிறுவர்களுக்கு தலா 500 ரூபாவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தேரர் வழங்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.அதுமட்டுமின்றி, சிறுவர்களை தகாத நடவடிக்கைகளுக்காக தமது விகாரைக்கு வழங்கிய வயது வந்த சிறுவர்களுக்கு நவீன கையடக்கத் தொலைபேசிகளை தேரர் வழங்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement