• May 17 2024

இலங்கையில் சிறுவர்கள் ஆபத்தான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்! - பெற்றோருக்கு கடும் எச்சரிக்கை

Chithra / Jan 13th 2023, 6:43 pm
image

Advertisement

டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் ஆபத்தான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளை குறைந்தபட்சம் மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்காவது அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் நாற்பது சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் சிறுவர்கள் ஆபத்தான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் - பெற்றோருக்கு கடும் எச்சரிக்கை டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் ஆபத்தான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குழந்தைகளை குறைந்தபட்சம் மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்காவது அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் நாற்பது சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement